Illinois Institute Of Technology

Hot N Spice

சரவணா ஸ்டோர்ஸ் சட்டையைத்தான் இனி சூர்யாவும் போடுவாரா?

June 15, 2010
பார்தி சிமெண்ட், நவரத்ன ஆயில் என வரும் வாய்ப்பு ஒன்றையும் விடாமல் கல்லா கட்டுவதில் இன்றைய ஹீரோக்களில் டாப் இடம் சந்தேகமில்லாமல் சூர்யாவுக்குதான்.

இப்போது சர்ச்சைக்குரிய சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிறுவனம் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றைத் திறந்துள்ளது. இந்த கடைக்காகத்தான் பெரும் தொகைக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.

அவருக்கு சம்பளமாக ரூ 3.5 கோடி வரை தரப்பட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்த அவரது மேனேஜருக்கு கமிஷனே 45 லட்சமாம்!

இந்த வாய்ப்பு குறித்து சூர்யா பெருமையுடன் இப்படிக் கூறுகிறார்:

பிக் பஜார் போன்ற பெரிய பெரிய வட இந்திய நிறுவனங்களே, சரவணா ஸ்டோர்ஸின் வெற்றியைப் பார்த்து, அது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிறுவனம் உயர் நடுத்தர வர்க்கத்தினரையும், உயர்தட்டு வர்க்கத்தினரையும் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எனக்கு அவர்கள் கொடுத்தது பெரிய சம்பளமல்ல. இன்றைக்கு என் மார்க்கெட் ரேட் என்னவோ அதைத்தான் கொடுத்துள்ளனர்", என்றார்.

சரீ... இந்த விளம்பரத் தூதரின் காஸ்ட்யூம்கள் இனி சரவணா ஸ்டோர்ஸிலிருந்து எடுக்கப்படுமா அல்லது ரேமண்ட்ஸ் ஷோரூமிலிருந்து வருமா?

குறிப்பு: சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன். இவர் நடிக்க வருமுன் பணியாற்றியது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில்! அந்த வகையில் இப்போதுதான் பொருத்தமான ரோலைத் தேர்ந்தெடுத்துள்ளார்!!

-புலிகேசி
Comments
  • Posted by  giri
    2010-06-16 07:24
    Next toilet cleaner ad ,then sudarmani jatti and banion ad
  • Posted by  sudhakar
    2010-06-16 05:20
    பாரதெசி நைஇ
  • Posted by  meena
    2010-06-16 00:48
    i hate this guy bcz e don't have sense. for money he will do all nonsense for ex his wife who will marry that kind of cheapest girl in life but e will dooooooooooooo
  • Posted by  SURESH
    2010-06-16 00:13
    AVAN ENTHA SHIRT POTTA UNGALAUKU ENNA DA VANTHUCHE NATHRINKALA