ஐரோப்பா
ஐரோப்பா கண்டம் யுரேஷியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களை காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
ஐரோப்பா உலனின் ஏழு கண்டங்களில் பரப்பளவில் 10,180,000 ச.கி;மீகள் இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வாடிகன் சிட்டி மிக சிறிய நாடாகும். இதன் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்). மக்கள் தொகை பரவலில் ஆசியா ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.
[தொகு] ஐரோப்பியாவின் ஆளுமை
16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல் உலகின் முக்கியமான கடல்வழி பாதைகளை கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரொப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாக பல நாடுகளை பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக அவற்றின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்த பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஆதிக்க சக்திகளாக வளர்ந்தன. 1991 ல் சொவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருகாக்கப்பட்டு ஆதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது.
[தொகு] ஐரோப்பாவிலுள்ள நாடுகள்
நாடுகள் | பரப்பளவு (ச.கிமீ) |
மக்கள் தொகை (1 ஜூலை, 2002) |
மக்கள் தொகை அடர்த்தி (ச.கிமீ-க்கு) |
தலைநகரம் |
---|---|---|---|---|
கிழக்கு ஐரோப்பா: | ||||
பெலாரஸ் | 207,600 | 10,335,382 | 49.8 | மின்ஸ்க் |
பல்கேரியா | 110,910 | 7,621,337 | 68.7 | சோஃபியா |
செக் குடியரசு | 78,866 | 10,256,760 | 130.1 | ப்ராக் |
அங்கேரி | 93,030 | 10,075,034 | 108.3 | புதாபெஸ்த்து |
மால்டோவா | 33,843 | 4,434,547 | 131.0 | சிஸிநவ் |
போலந்து | 312,685 | 38,625,478 | 123.5 | வர்சாவா |
ருமேனியா | 238,391 | 21,698,181 | 91.0 | புகாரெத்து |
இரசியா | 3,960,000 | 106,037,143 | 26.8 | மாஸ்கோ |
சுலோவேகியா | 48,845 | 5,422,366 | 111.0 | பிராட்டிஸ்லாவா |
உக்ரைன் | 603,700 | 48,396,470 | 80.2 | கியெவ் |
வடக்கு ஐரோப்பா: | ||||
டென்மார்க் | 43,094 | 5,368,854 | 124.6 | கோபன்ஹேகன் |
எத்தோனியா | 45,226 | 1,415,681 | 31.3 | தாலின் |
பின்லாந்து | 336,593 | 5,157,537 | 15.3 | எல்சின்கி |
ஐஸ்லாந்து | 103,000 | 307,261 | 2.7 | ரெய்க்யாவிக் |
அயர்லாந்து குடியரசு | 70,280 | 4,234,925 | 60.3 | டப்ளின் |
இலத்துவியா | 64,589 | 2,366,515 | 36.6 | ரிகா |
இலித்துவேனியா | 65,200 | 3,601,138 | 55.2 | வில்னியஸ் |
நார்வே | 324,220 | 4,525,116 | 14.0 | ஓஸ்லோ |
ஸ்வீடன் | 449,964 | 9,090,113 | 19.7 | ஸ்டாக்ஹோம் |
ஐக்கிய இராச்சியம் | 244,820 | 61,100,835 | 244.2 | இலண்டன் |
தெற்கு ஐரோப்பா: | ||||
அல்பேனியா | 28,748 | 3,600,523 | 125.2 | டிரானா |
அன்டோரா | 468 | 68,403 | 146.2 | அன்டோரா-லா-வில்லா |
போசுனியா எர்சகோவினா | 51,129 | 4,448,500 | 77.5 | சரயேவோ |
குரோசியா | 56,542 | 4,437,460 | 77.7 | சாக்ரப் |
கிரேக்கம் | 131,940 | 10,645,343 | 80.7 | ஏதென்சு |
இத்தாலி | 301,230 | 58,751,711 | 191.6 | ரோம் |
மாசிடோனிய குடியரசு | 25,333 | 2,054,800 | 81.1 | ஸ்கோப்யே |
மால்டா | 316 | 397,499 | 1,257.9 | வாலெட்டா |
மாந்தநெக்ரோ | 13,812 | 616,258 | 44.6 | பொட்கோரீட்சா |
போர்த்துகல் | 91,568 | 10,084,245 | 110.1 | லிஸ்பன் |
தூய மரீனோ | 61 | 27,730 | 454.6 | தூய மரீனோ |
செர்பியா | 88,361 | 9,663,742 | 109.4 | பெல்கிரேடு |
சுலோவீனியா | 20,273 | 1,932,917 | 95.3 | லியுப்ல்யானா |
ஸ்பெயின் | 504,851 | 45,061,274 | 89.3 | மாட்ரிட் |
வத்திக்கான் நகர் | 0.44 | 900 | 2,045.5 | வத்திக்கான் நகர் |
மேற்கு ஐரோப்பா: | ||||
ஆஸ்திரியா | 83,858 | 8,169,929 | 97.4 | வியன்னா |
பெல்ஜியம் | 30,510 | 10,274,595 | 336.8 | ப்ரஸ்ஸல்ஸ் |
பிரான்ஸ் | 547,030 | 59,765,983 | 109.3 | பாரிசு |
ஜெர்மனி | 357,021 | 83,251,851 | 233.2 | பெர்லின் |
லீஷ்டென்ஸ்டைன் | 160 | 32,842 | 205.3 | வாடூஸ் |
லக்செம்பூர்க் | 2,586 | 448,569 | 173.5 | லக்செம்பூர்க் நகரம் |
மொனாக்கோ | 1.95 | 31,987 | 16,403.6 | மொனாக்கோ |
நெதர்லாந்து | 41,526 | 16,318,199 | 393.0 | ஆம்ஸ்டர்டம் |
சுவிஸர்லாந்து | 41,290 | 7,507,000 | 176.8 | பெர்ன் |
நடுவண் ஆசியா: | ||||
கசாகிஸ்தான் | 150,000 | 600,000 | 4.0 | அத்தானா |
மேற்கு ஆசியா:k[›] | ||||
அசர்பெய்ஜான் | 7,110 | 175,200 | 24.6 | பாகூ |
ஜார்ஜியா | 2,000 | 37,520 | 18.8 | திபிலீசி |
துருக்கி | 24,378 | 11,044,932 | 453.1 | அங்காரா |
Total | 10,176,246o[›] | 709,608,850p[›] | 69.7 |
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
உலகின் கண்டங்கள் |
---|
உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க |
|
for more information see english version.