"எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள" தொடருக்கு "அழகி"யின் அங்கீகாரம்..!!


பிரபல தமிழ் எழுதி மென்பொருளான 'அழகி' தளத்தில் எளிய தமிழில் HTML  கற்றுக்கொள்ள தொடரின் இணைப்பை கொடுத்து தங்கம்வலைப்பூவின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் வலைதள நிர்வாகி "விஷி" திரு. விஸ்வநாதன் அவர்கள்.. அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

அழகி மென்பொருளைப் பற்றி அறிந்தவர்கள் பலர்.. இம்மென்பொருளை வடிவமைத்து செயல்படுத்திக்கொண்டிருக்கும் பெருமைமிகு தமிழ் ஆர்வலர் திரு. விஸ்வநாதன் அவர்கள்.

அழகி தளத்தில் நமது தங்கம்பழனி வலைதளத்தில் தொடர்பதிவாக வெளிவரும் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள என்ற தொடரை பாராட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் முகமாகவும் தமது அழகி தளத்தில் பதிவிற்கான இணைப்பைக் கொடுத்து நம்மை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

 அழகிதளத்தில் இடம்பெற்ற தங்கம்பழனிவலைப்பூவின் "எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள" தொடர்பதிவைப் பற்றிய வரிகள்..

'Learn HTML in Tamil'


    There are lots of HTML tutorials in English. But, the tutorial available here in ezilnila.com is in Tamil (in 7 lucid parts) and moreover, it teaches HTML in a style (akin to teaching 'a, b, c, d' to children) which any layman/laywoman can easily understand and start creating html pages within minutes.


    Kindly see Thangam palani's html tutorial pages also. Newly started on Mar 2012. Quite detailed.


I immensely thank (Late) Sri. Umar, Ezilnila Mahen and Thangam Palani for this wonderful and exceedingly worthy contribution which many of our sisters and brothers who aspire to create html pages will find extremely useful.


இது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக இல்லாமல் தொடர்ந்து தளத்தை பார்வையிட்டு, உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு பதிவுகளுக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் நண்பர்களான உங்களுக்கே இப்பெருமை சேரும்.

அழகி தளத்தின் நிர்வாகி என்பதை விட அழகி மென்பொருள் உருவாக்குநர் என்ற முறையில் 'விஷி' என்ற விஸ்வநாதன் அவர்களை நாம் அனைவரும் அறிவோம்.. ஆனால் புதியவர்களுக்காக 'அழகி' வலைதளத்தைப் பற்றியும் அதன் நிறுவனர் 'விஷி' என்ற விஸ்வநாதன் அவர்களைப் பற்றிய ஒரு கருத்துகளை இங்கு பதிவிடுகிறேன்.

"அழகி" மென்பொருள் நிறுவனர் திரு. விஸ்வநாதன்
இவரைப்பற்றி நிலாச்சாரல் எனும் வலைதளத்தில் இடம்பெற்ற கட்டுரையில்...


விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.

இந்தத் தமிழன்னையின் சிறப்பு மைந்தன், தஞ்சாவூர் மாவட்டதைச் சேர்ந்த கண்டமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். பொறியியற் பட்டத்தோடு முதுகலை டிப்ளமோவும் முடித்த கையோடு பஜாஜ் ஆட்டோ(Bajaj Auto) நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து டாட்டா கன்சல்டன்ஸியிலும்(Tata Consultancy ) பணியாற்றியவர்.


 தமிழ் சமூகம் பயன் பெற "அழகி" எனும் தமிழ் மென்பொருள் தொகுப்பை உருவாக்கித் தந்தவர்.

இந்தக் கட்டுரையை முழுமையாக திரு. விஸ்வநாதன் அவர்களின் நேர்காணலுடன் படிக்க இங்கு சொடுக்கவும்.  

மேலும் தன்னம்பிக்கை ஊற்றாக விளங்கும் இவர் தன்னம்பிக்கையால் சாதனை புரிந்த ஜனா என்ற சிறுவனுக்கு தனது தளத்தில் ஒரு வலைதளமே உருவாக்கயிருக்கிறார்.மின்சாரத் தாக்கத்தினால் உடல் உறுப்புகளை இழந்த இந்தச் சிறுவனைப் பாராட்டும் முகமாகவும், ஊக்குவிக்கும் வகையில் இதுவரை சிறுவனின் சாதனைகள், பத்திரிகைச் செய்திகள், படங்கள் போன்றவைற்றைச் சேகரித்து அந்தத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 


அழகி தளத்திலிருந்து சாதனைச் சிறுவன் ஜனாவின் படங்கள்...

மின்சாரத் தாக்கத்திற்கு முன்பு சிறுவனின் புகைப்படம்.


தாயாருடன் ஜனா
Jana with mother

வாயின் உதவியால் ஓவியம் வரைகிறார்.
Drawing
வளந்துவிட்ட ஜனா.. கணினியில் ஓவியம் வரையவும் கற்றுக்கொண்டுவிட்டார்.


தன்னம்பிக்கை மறுவடிவம் ஜனா...


மென்பொருள் துறையில் மட்டுமல்ல.. மனிதாபிமானத்திலும் தன்னிகரற்று விளங்கும் 'விஷி' என்ற விஷ்வநாதன் அவர்களை தங்கம்பழனி வலைதளம் வாழ்த்தி வணங்குகிறது. 

உங்களுக்கு விருப்பமெனில் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடரின் இணைப்பை உங்கள் தங்களிலும்  சேர்க்கலாம்.

உங்கள் தளங்களிலும் இணைப்புக்கொடுக்க...

கீழ்க்கண்ட இணைப்பு நிரல்வரிகளை காப்பி(நகலெடுத்து) செய்து
உங்கள் தளத்தில் Add Gadget ==> HTML/Javasctipt==>ல் ஒட்டி(PASTE) செய்து சேமித்துக்கொள்ளவும்.
 
நன்றி நண்பர்களே..!! அடுத்த பதிவில் சந்திப்போம்.புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!