Want web Design? contact: 9865076239

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - Body tag-ல் சிறப்புப் பண்பு bgcolor

வணக்கம் நண்பர்களே.!

ஒரு HTML ஆவணத்தின் உரைப்பகுதியானது <BODY> மற்றும் </BODY> என்னும் குறி ஒட்டுகளுக்கு(Tags) இடையே இருக்கும்.

இது நமக்குத் தெரிந்ததே. இந்த BODY குறிஒட்டில்(TAG) லும் நிறைய சிறப்புப் பண்புகளைச் சேர்க்க முடியும். அந்த வகையில் ஒரு ஆவணத்தின் பின்னணி நிறத்தை கொடுக்கக்கூடிய சிறப்புப் பண்பான BGCOLOR என்பதைப் பற்றி பார்ப்போம்.

<BODY>  குறி ஒட்டில் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் பின்னணி நிறம்(BACKGROUND), பின்னணியில் படம்(Background Image), எழுத்தின் நிறம்(Font COLOR) இணைப்புக்  கோட்டின் நிறம்(LINK LINE COLOR) போன்றவற்றைக் கொடுக்க முடியும்.
<BODY> குறிஒட்டில் (Tag ) BGCOLOR, TEXT, BACKGROUND, LINK, VLING, ALINK, LEFTMARGIN மற்றும் TOPMARGIN போன்ற பண்புகளைக் கொடுக்க முடியும். இந்தப் பண்புகளைப் பற்றிக் இன்றையப் பாடத்தில் பார்ப்போம்.

BGCOLOR - (பின்னணி நிறம்) பண்பு

<BODY> என்ற குறி ஒட்டில் BGCOLOR என்னும் பண்பைச் சேர்ப்பதன் மூலம் பக்கத்தின் JSன்னணி நிறத்தைக் கொடுக்க முடியும். RGB நிறக் குறிமுறையைப்(Color names) பயன்படுத்துதல், ஆறு இலக்க பதினறும எண்ணைப் (Color Values)பயன்படுத்துதல் போன்ற இரு வழிகளில் நிறத்தைக் கொடுக்க முடியும்.

ஆறு இலக்க பதினறும எண்ணில் முதல் இரண்டு இலக்கம் சிவப்பு நிறத்தையும், அடுத்த இரண்டு இலக்கம் பச்சை நிறத்தையும், கடைசி இரண்டு இலக்கம் ஊதா நிறத்தையும் குறிக்கின்றன. இவை அனைத்தும் முதன்மை நிறங்களான (RGB - RED, GREEN, BLUE) ஆகியவை.

எடுத்துக்காட்டாக FFFFFF என்பது வெள்ளை நிறத்தையும், FF0000 என்பது சிவப்பு நிறத்தையும், FFFF00 என்பது மஞ்சள் நிறத்தையும் குறிக்கின்றன. நிறத்தை இவ்வாறு பதின்றும இலக்கங்களில் கொடுப்பது சிரமமானதாக இருக்கலாம்.

எனவே தற்போது உலவிகள் நிறத்தின் பெயர்களைப் புரிந்துகொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த எண்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நேரடியாகவே நிறத்தின் பெயரை கொடுக்கலாம்.

black, silver, Grey, white, maroon, red, purple, fuchsia, green, lime, Olive, yellow, navy, blue, teal மற்றும் aqua என்பன போன்ற பதினாறு வகை நிறங்கள் வரை ஏற்றுக்கொள்கின்றன.

உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

<body bgcolor = "green">

என்று கொடுக்கும்போது உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணி நிறமானது பச்சை நிறத்தில் காணப்படும்.

பின்னணி நிறம் எதுவும் இல்லையெனில் எப்போதும்போல வெண்மையாகவே இருக்கும்.

<HTML>
<HEAD>
<TITLE>How to put background color in html page?</TITLE>
</HEAD>
<BODY bgcolor="green">
வணக்கம் நண்பர்களே,
இது தங்கம்பழனி. நான் உங்களுக்குஎளிய தமிழில்<
HTML எனும் தலைப்பில்
கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தொடர்ந்து இந்தத் தொடர்பதிவைப்
படித்து பயன்பெற வேண்டுகிறேன்.
நன்றி
</BODY>
</HTML>

மேற்கண்டவற்றை .html என்ற விரிவுடன் சேமித்து உங்கள் வலைஉலவியில் திறந்து பார்க்கும்போது உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணி நிறம் பச்சை நிறத்தில் காணப்படும்.


அடுத்தப் பதிவில் இதே <body> குறிஒட்டில் இன்னும் சில சிறப்புப் பண்புகள் இருக்கிறது. அதில் TEXT பண்பு, BACKGROUND பண்பு(attributes)களைப்பற்றிப் படிப்போம். நன்றி நண்பர்களே..!!!

5 comments

  1. தெளிவான விளக்கங்கள் நன்றி பழனி சார்

    ReplyDelete
  2. நிறங்களைத் தேர்வு செய்ய இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்: http://clourcodes.info

    ReplyDelete

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்..

 
© 2011 TECH THANGAM
Designed by Tech Thangam
Posts RSSComments RSS
Back to top