மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மருத்துவத்துடன் தொடர்புடைய, பண்டைக் கிரேக்கச் சின்னமான ஒற்றைப் பாம்புடன் கூடிய அஸ்கிளெப்பியஸ் கோல். மருத்துவத் தொடர்புள்ள பல தற்காலக் கழகங்களும், நிறுவனங்களும் அஸ்கிளெப்பியஸ் கோலைத் தமது சின்னங்களில் சேர்த்துள்ளன.
மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் செய்கிறார். லூவர் அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்ஸ்.

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது, நோய்த்தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல்நல அறிவியல், உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறன குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவையாகவே உள்ளன.

வரலாறு[தொகு]

முதன்மைக் கட்டுரை: மருத்துவத்துறையின் வரலாறு

வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு உறுப்புக்கள், கனிமங்கள் அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மீக முறைகளில், ஆன்மவாதம் (animism), ஆன்மீகவாதம் (spiritualism), ஆவித்தொடர்பு (shamanism), குறிசொல்லல் (divination) என்பவை அடங்கும். மருத்துவ மானிடவியல் பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்கு சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது.

மருத்துவம் குறித்த பழைய பதிவுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆயுர்வேத மருத்துவம், பண்டைய எகிப்திய மருத்துவம், மரபுவழிச் சீன மருத்துவம், அமெரிக்காக்களில் வழங்கிய மருத்துவ முறைகள், பண்டைக் கிரேக்க மருத்துவம் என்பவை தொடர்பில் கிடைத்துள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்கிரட்டீஸ், காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். ஹிபோக்கிரட்டீசினதும், காலெனினதும் நூல்களின் அரபி மொழி மொழிபெயர்ப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் பொலிமத் அவிசென்னா, அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அபுல்காசிஸ், சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அவென் சோவார், சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் இபின் அல் நாபிஸ், அவெரோஸ் என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர். குழந்தை மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரேசஸ் என்பார், மேல் நாட்டு மத்தியகால மருத்துவத்தில் செல்வாக்குடன் விளங்கிய உடல்நீர்மவியம் (humorism) என்னும் கிரேக்க மருத்துவக் கோட்பாட்டை முதன் முதலில் பிழை எனக் காட்டினார்.

மருத்துவர்களுக்கான நெறிமுறைகள்[தொகு]

மருத்துவ நெறிமுறைகள் என்பது மருத்துவ பயிற்சியை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் ஆகும்.இதில் வரலாறு, தத்துவம், இறையியல், மற்றும் சமூகவியல் சார்ந்த மருத்துவ கல்வியியல் துறை சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கியது.பொதுவான மருத்துவ நெறிமுறைகள் ஆறு ஆகும்.அவை:

  • சுயாட்சி - நோயாளி சிகிச்சை மறுக்க அல்லது ஒத்துக்கொள்ள மருத்துவருக்கு உரிமை உண்டு.
  • பலனளித்தல் - ஒரு மருத்துவர் நோயாளி சிறந்த அக்கறை காட்டவேண்டும்.
  • நீதி - அவர் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிறழ்வுகள் எதையும் அணுமதிக்க கூடாது.
  • குற்றம் செய்யாதிருத்தல்-நோயாளியை காயப்படுத்தாதிருத்தல்
  • மரியாதை - நோயாளி கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்
  • உண்மை மற்றும் நேர்மை - முடிவுகளை மறைக்காமல் கூறவேண்டும்.

மருத்துவ கல்வி[தொகு]

மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி உலகெங்கிலும் வேறுபடுகிறது. இது பொதுவாக ஒரு பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் கற்பிக்கபடுகிறது.இதை தொடர்ந்து முதுகலை தொழில் பயிற்சியாக மருத்துவ கல்வி கற்பிக்கபடுகிறது.கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் முதுகலை மருத்துவ பட்டம், பெரும்பாலும் சுருக்கமாக MD எனப்படும். மருத்துவ தொழில்நுட்பம் ஒரு விரைவான விகிதத்தில் வளர்வதற்கு ஏற்ப தொடர்ந்து மருத்துவ கல்வியில் பல திருத்தங்கள் செய்யப்படுகின்றன.மேலும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிவை மேம்படுத்த மருத்துவ பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் தவிர மற்றவர்களிடம் இணையவழி கல்வி மூலம் வளர்த்துக்கொள்கின்றனர்.

மருத்துவத்தின் பிரிவுகள்[தொகு]

மருத்துவ பயிற்சியாளர்கள் தவிர குறிப்பிட துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ வசதியை தருகின்றனர். பல துறைகள் மருத்துவ துறையில் இருந்தாலும் பல் மருத்துவம் ஒரு தனி துறையாக கருதப்படுகிறது

மருத்துவத்தில் உள்ள முக்கிய கிளைகள்

  • அடிப்படை மருத்துவ அறிவியல்
  • சிறப்பு மருத்துவம்
  • பலதுறை மருத்துவம்

அடிப்படை மருத்துவ அறிவியலின் வகைகள்[தொகு]

  • உடற்கூறியல்
  • பேரியல் அல்லது மொத்த உடற்கூறியல்
  • உயிரணுவியல்
  • உயிர் வேதியியல்
  • உயிரி இயற்பியல்
  • உயிரணுவியல்
  • கருவியல்
  • உட்சுரப்பியல்
  • நுண்ணுயிரியல்
  • மூலக்கூறு உயிரியல்
  • நரம்பியல்
  • உளவியல்
  • ஊட்டச்சத்து அறிவியல்
  • மருந்தியல்
  • ஒளி உயிரியல்
  • உடலியல்
  • கதிரியக்க உயிரியல்

சிறப்பு மருத்துவத்தின் வகைகள்[தொகு]

  • இதயவியல்
  • உயிர் காக்கும் மருந்தியல்
  • உட்சுரப்பியல்
  • இரைப்பை,குடலியல்
  • முதியோர்கள் பற்றிய மருத்துவ துறை
  • குருதியியல்
  • தொற்று நோய்கள்
  • சிறுநீரகவியல்
  • நரம்பியல்
  • குழந்தை மருத்துவ அறிவியல்
  • நுரையீரலியல்

பலதுறை மருத்துவத்தின் வகைகள்[தொகு]

  • போதை விடுவிப்பு மருந்து
  • மருத்துவ நெறிமுறைகள்
  • உயிரிமருத்துவ பொறியியல்
  • மருத்துவ மருந்தியல்
  • பாதுகாப்பு மருத்துவம்
  • பேரழிவு மருத்துவம்
  • பரிணாம மருத்துவம்
  • தடயவியல் மருத்துவம்
  • பாலினம் சார்ந்த மருத்துவம்
  • நல்வாழ்வு மற்றும் நோய் தணிப்பு மருத்துவம்
  • லேசர் மருத்துவம்
  • மருத்துவ தகவலியல்
  • வலி மேலாண்மை
  • பாலியல் மருந்துவம்
  • விளையாட்டு மருத்துவம்
  • சிகிச்சை மருத்துவம்
  • மருத்துவம் சுற்றுலா
  • அவசர சிகிச்சை
  • கால்நடை மருத்துவம்
  • வனப்பகுதி மருத்துவம்

அறுவை சிகிச்சை[தொகு]

அறுவை சிகிச்சை சிறப்பு சிகிச்சை என் அளக்கப்படுகிறது,மேலும் அறுவை சிகிச்சை தேவை என்ற போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன அறுவை சிகிச்சை தேவையில்லாத மருத்துவரே முடிவு செய்ய வேண்டும்.அறுவை சிகிச்சையானது பொது அறுவை சிகிச்சை , இருதய அறுவை சிகிச்சை , குடல் அறுவை சிகிச்சை , மூளை அறுவைசிகிச்சை ,புற்றுநோய் அறுவை சிகிச்சை , எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை , செவிமிடற்றியல் , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ,மகப்பேறு அறுவை சிகிச்சை , மாற்று அறுவை சிகிச்சை , விபத்து அறுவை சிகிச்சை , சிறுநீரக , வாஸ்குலர் அறுவை சிகிச்சை ,உட்பட பல சிறப்பு துணைபிரிவுகளை கொண்டது.எனினும் சில சமயங்களில் உணர்வகற்றுதல், அறுவை சிகிச்சை பகுதியாக உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவம்&oldid=1648215" இருந்து மீள்விக்கப்பட்டது