தேவகோட்டை அருகே கோவிலில் சிலை திருடிய மாணவர் உள்பட 2 பேர் கைது || temple statue theft 2 person arrest near devakottai
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
  • பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்கா சாம்பியன்
  • தருமபுரி: பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
  • 6 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
  • ஆம்பூர், வாணியம்பாடியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்
  • பிலிபைன்ஸ் நாட்டில் 2வது நபருக்கு மெர்ஸ் நோய் தாக்கம்
  • 6 இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இரவு முழுவதும் துப்பாக்கி சூடு
தேவகோட்டை அருகே கோவிலில் சிலை திருடிய மாணவர் உள்பட 2 பேர் கைது
தேவகோட்டை அருகே கோவிலில் சிலை திருடிய மாணவர் உள்பட 2 பேர் கைது

தேவகோட்டை, ஜூலை 6–

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி அருகே உள்ளது தேர்போகி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த தாமிரத்தால் செய்யப்பட்ட முருகன் சிலையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து அந்த கோவில் பூசாரி முருகேசன் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிலையை தேடி வந்தனர். இந்த நிலையில் திருடு போன சிலை தேவகோட்டை பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு கடத்தப்பட இருப்பதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனையிட்டதில் அவர்கள் திருட்டு போன முருகன் சிலையை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.

அதன்பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சின்னத் தம்பி என்பவரது மகன் முத்துக்குமார்(வயது 26), தேவகோட்டை வீர.பளசந்து பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.

காளீஸ்வரன் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் இளநிலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரையும் போலீசார் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சிவகங்கை

section1

சுகாதாரம்– கல்விக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்: சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டர் மலர்விழி பேச்சு

சிவகங்கை, ஜூலை 5–சுகாதாரம் மற்றும் கல்விக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து செயல்பட வேண்டும் என்று புதிய ....»