ஆம்ஸ்டர்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆம்ஸ்டர்டாம்
Amsterdam, 8 am.jpg
ஆம்ஸ்டர்டாம்-இன் கொடி
கொடி
ஆம்ஸ்டர்டாம்-இன் மரபுச் சின்னம்
Coat of arms
அடை பெயர்: வடக்கின் வெனிஸ்
Motto: Heldhaftig, Vastberaden, Barmhartig
(வலியது, தீர்மானிக்கப்பட்டு, தயாளம்)
ஆம்ஸ்டர்டாம் அமைந்திடம்
ஆம்ஸ்டர்டாம் அமைந்திடம்
ஆள்கூறுகள்: 52°22′23″N 4°53′32″E / 52.37306°N 4.89222°E / 52.37306; 4.89222
நாடு  நெதர்லாந்து
மாகாணம் வடக்கு ஹாலன்ட்
ஆட்சி
 • மாநகராட்சித் தலைவர் ஜொப் கோஹென்[1]
 • ஆணையர்கள் லொடெவிக் ஆஷர்
கரொலைன் கேரெல்ஸ்
சீர்ட் ஹெரெமா
மார்ட்டின் வான் போல்கீஸ்ட்
மரிக் வொஸ்
பரப்பு[2][3]
 • மொத்தம் 219
 • நிலம் 166
 • நீர் 53
 • மாநகராட்சி 1,896
மக்கள்தொகை (ஜனவரி 1, 2006)[4][5]
 • மொத்தம் 7,42,884
 • அடர்த்தி 4,459
 • மாநகராட்சி 14,68,122
 • ரான்ட்ஸ்டாட் 66,59,300
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (ப.சே.நே.) CEST (ஒசநே+2)
இணையத்தளம் www.amsterdam.nl

ஆம்ஸ்டர்டம் இந்த ஒலிக்கோப்பு பற்றி ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. ஆகஸ்ட் 1, 2006 நிலவரப்படி, ஆம்ஸ்டர்டமில் 741,329 மக்கள் வாழ்கிறார்கள். இதுவே, அண்டியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பெரு நகரான ஆம்ஸ்டர்டமையும் கணக்கில் கொண்டால் 15 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

ஆம்ஸ்டர்மின் நகர மையம், ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் மையங்களில் ஒன்றாகும். இந்த நகர மையத்தின் வரலாறு 17ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.

Amsterdam

ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தின் தலைநகராக இருந்தபோதிலும் நெதர்லாந்தின் நீதிமன்றம், பாராளுமன்றம், அரசாங்க அமைப்புகள் போன்றவை இங்கு இல்லை. இவை அனைத்தும் டென் ஹாக் நகரில் இருக்கின்றன. தவிர, ஆம்ஸ்டர்டம், அது அமைந்திருக்கும் வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமும் அன்று. ஹார்லெம் நகரே வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமாகும்.

ஆம்ஸ்டர்டம், அதன் பன்முகத் தன்மை, பொறுத்துப் போகும் தன்மை, தாராளப் போக்கு ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "WorldMayor.com - Job Cohen, Mayor of Amsterdam 2006". பார்த்த நாள் 2007-04-19.
  2. "Kerncijfers voor Amsterdam en de stadsdelen, 1 januari 2006". www.os.amsterdam.nl. Research and Statistics Service, City of Amsterdam. பார்த்த நாள் 2007-04-04.
  3. "Area, population density, dwelling density and average dwelling occupation, 1 January 2006". www.os.amsterdam.nl. Research and Statistics Service, City of Amsterdam. பார்த்த நாள் 2007-04-04.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CBS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Randstadmonitor 2006". www.regio-randstad.nl. Regio Randstad (January 2007). பார்த்த நாள் 2007-04-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்ஸ்டர்டம்&oldid=1412380" இருந்து மீள்விக்கப்பட்டது