சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீதி தேவதை, நீதித்துறை சின்னம்

சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும்.

தோற்றம்[தொகு]

சட்டத்தின் தோற்றம் மனிதகுலத்தின் தொன்மைச் சமூகவாழ்க்கைக்காலத்தின் தோற்றத்தோடு தொடர்புடையதாகும். சமூகமாகத்திரண்ட மனிதர்களிடம் ஏற்பட்ட வகுப்பு வேறுபாட்டால் தோன்றிய அரசு எனும் நிறுவனத்தின் தோற்றத்தோடு சட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்தின் இரு முதன்மைக் கூறுகளாகும். இதன்படி அரசின் தோற்றக்காலமே சட்டத்தின் தோற்றக்காலமாக இருந்திருக்க கூடியதாகும்.

வரலாறு[தொகு]

சட்டமும் அறமும்[தொகு]

அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாகும். அதன் மற்றொரு வடிவமே சட்டம் என்று கருதப்படுகிறது. திருடுதல் கெடுநடத்தை என்று அறம் போதிக்கிறது. திருடினால் தண்டனை உண்டு என்று சட்டம் எச்சரிக்கிறது. உயிர்களைக் கொல்லுதல் பாவம் என்று அறம் கருணையோடு கற்பிக்கிறது. கொலை தண்டிக்கத்தக்கது என்று சட்டம் மிரட்டுகிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே சட்டமும் அறமும் என்று கருதுவதற்கு இக்கருத்தியலே அடிப்படையாகும். தமிழ்நாட்டின் மிகப்பழைய சட்டம் ஒழுங்குக் குலைவுக் காலமான களப்பிரர் காலத்தில் நீதியிலக்கியங்கள் பல தோற்றம் பெற்றன எனும் வரலாற்றுக் குறிப்பு இதனை உறுதிப்படுத்துகிறது.

சட்டமும் நீதியும்[தொகு]

நீதி ஒரு செயல் அல்லது செயல்தவிர்ப்பால் பாதிப்புற்றவர்மேல் வினைபுரிவதாகும். சட்டம் அச்செயல் அல்லது செயல்தவிர்ப்பைப் புரிந்தவரின் மீது வினைபுரிவதாகும். சட்டத்தின் வரம்பு நீதியின் வரம்போடு ஒப்பிடுகையில் குறுகியது. நீதியின் நோக்கத்தோடு ஒப்பிடுகையில் சட்டத்தின் நோக்கம் எளிமையானது.

நவீன சட்டங்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

Wikibooks
விக்கி நூல்கள் Wikiversity, பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:



"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்&oldid=1826672" இருந்து மீள்விக்கப்பட்டது