பாக்கித்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
اسلامی جمہوریۂ پاکستان
இசுலாமி சமுரிய-பாகிஸ்தான்
பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு
பாகிஸ்தான் கொடி பாகிஸ்தான் சின்னம்
குறிக்கோள்
இமான், இட்டெட், தசிம்
(நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்)
நாட்டுப்பண்
குவாமி தரனா
(நாட்டு வணக்கம்)[1][2]
Location of பாகிஸ்தான்
தலைநகரம் இசுலமாபாத்
33°40′N 73°10′E / 33.667°N 73.167°E / 33.667; 73.167
பெரிய நகரம் கராச்சி
ஆட்சி மொழி(கள்) உருது, ஆங்கிலம்
அரசு இசுலாமிய கூட்டாட்சி குடியரசு
 -  நாட்டுத் தலைவர் மம்நூன் ஹுசைன்
 -  பிரதமர் நவாஸ் ஷெரீப்
சுதந்திரம் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 
 -  பிரகடணம் ஆகஸ்டு 14, 1947 
 -  குடியரசு மார்ச் 23, 1956 
பரப்பளவு
 -  மொத்தம் 880254 கிமீ² (34வது)
339868 சது. மை 
 -  நீர் (%) 3.1
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 163,985,373 [3] (6வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $404.6 பில்லியன் (26வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,628 (128வது)
ம.வ.சு (2003) 0.527 (மத்திம) (135வது)
நாணயம் பாகிஸ்தான் ரூபாய் (Rs.) (PKR)
நேர வலயம் PST (ஒ.ச.நே.+5:00)
 -  கோடை (ப.சே.நே.) பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [4] (ஒ.ச.நே.+6)
இணைய குறி .pk
தொலைபேசி +92
பாக்கித்தானின் தேசியச் சின்னங்கள் (அலுவல்முறையில்)[சான்று தேவை]
தேசிய விலங்கு Markhor.jpg
தேசியப் பறவை Keklik.jpg
தேசிய மரம் Pedrengo cedro nel parco Frizzoni.jpg
தேசிய மலர் Jasminum officinale.JPG
தேசிய பாரம்பரிய விலங்கு Snow Leopard 13.jpg
தேசியப் பாரம்பரிய பறவை Vándorsólyom.JPG
தேசிய நீர்நிலை பாலூட்டி Platanista gangetica.jpg
தேசிய ஊர்வன Persiancrocodile.jpg
தேசிய நீர்நில வாழ்வி Bufo stomaticus04.jpg
தேசியக் கனி Chaunsa.JPG
தேசியப் பள்ளிவாசல் Shah Faisal Mosque (Islamabad, Pakistan).jpg
தேசிய மோசலியம்
தேசிய ஆறு Indus river from karakouram highway.jpg
தேசிய மலை K2, Mount Godwin Austen, Chogori, Savage Mountain.jpg

பாக்கிசுத்தான் (Pakistan, பாகிஸ்தான், (இந்த ஒலிக்கோப்பு பற்றி pækɨstæn அல்லது இந்த ஒலிக்கோப்பு பற்றி pɑːkiˈstɑːn; உருது: پاکستان), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமான் குடாவில் 1,046-கிலோமீற்றர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானித்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானித்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தற்போது பாக்கித்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முசுலிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசெடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துர்ரானி பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கித்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கித்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் உதயமானது.

நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான் விளங்குகின்றது. A regional and middle power, உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கித்தான் அணுவாற்றல் மற்றும் அணுவாயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[5][6] விளங்குகின்றது; முசுலிம் உலகில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றன. மிகுமக்கள்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மை பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சு குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இசுலாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[8]

பெயர்க்காரணம்[தொகு]

பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள்[9].

வரலாறு[தொகு]

1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கித்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கித்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.

புவியியல்[தொகு]

பாக்கித்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கித்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மக்கள்[தொகு]

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இசுலாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இசுலாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

பாக்கித்தானின் மாகாணங்களும், பிரதேசங்களும்

பாக்கித்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

Disputed Region of Kashmir

மாகாணங்கள்:

  1. பலூச்சிசுதான்
  2. கைபர் பக்தூன்க்வா (NWFP)
  3. பஞ்சாப்
  4. சிந்து

பிரதேசங்கள்:

  1. இசுலாமாபாத் தலைநகரப்பகுதி
  2. நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:

  1. ஆசாத் காஷ்மீரம்
  2. கில்ஜீத்-பால்திஸ்தான்

அரசியல்[தொகு]

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.

பொருளாதாரம்[தொகு]

பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனித்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம்(Opium) போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.

குறிப்புகள்[தொகு]

  1. Official website, American Institute of Pakistan Studies. ""National Anthem of Pakistan"". பார்த்த நாள் 2006-04-18.
  2. Embassy of Pakistan, Washington D. C.. ""Pakistani Flag"". பார்த்த நாள் 2006-04-18.
  3. World Gazetteer population estimate for 2006
  4. முழுமையான நேரவலய மேம்படுத்தல்கள் மைக்ரோசாப்ட்
  5. Barry Buzan (2004). The United States and the great powers: world politics in the twenty-first century. Polity. பக். 71, 99. ISBN 978-0-7456-3374-9. http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8. பார்த்த நாள்: 27 December 2011. 
  6. Hussein Solomon. "South African Foreign Policy and Middle Power Leadership". மூல முகவரியிலிருந்து 24 June 2002 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 December 2011.
  7. Pakistan among top 20 happiest countries, beating India, US: Report
  8. Thumbs up: Pakistan meets criteria for CERN
  9. Choudhary Rahmat Ali (28 சனவரி 1933). "Now or never: Are we to live or perish for ever?". Columbia University.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்&oldid=1826910" இருந்து மீள்விக்கப்பட்டது