1936
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
ஆண்டுகள்: | 1933 1934 1935 - 1936 - 1937 1938 1939 |
1936 (MCMXXXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி 6 - 4வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஜேர்மனியில் ஆரம்பமாயின.
- பிப்ரவரி 17 - மாயாவி (சித்திரக்கதை) பிறந்த நாள்.
- பெப்ரவரி 26 - ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது. சில அரசியல்வாதிகல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 1 - ஹூவர் அணைக்கட்டு அமைத்து முடிக்கப்பட்டது.
- மே 7 - எதியோப்பியாவை இத்தாலி இணைத்துக் கொண்டது.
- மே 9 - எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
- ஆகஸ்ட் 1 - பேர்லினில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. முதற்தடவையாக நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன.
- செப்டம்பர் 6 - கடைசி தாசுமானியப் புலி ஆத்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் இறந்தது.
- நவம்பர் 12 - திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சித்திரைத்திருநாள் மக்கராஜாவின் 25 வது பிறந்த நாளின் போது சேத்தலை என்ற இடத்தில் உள்ள கோவிலுள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்கள்.
- நவம்பர் 30 - லண்டனில் பளிங்கு அரண்மனை (Crystal Palace) தீக்கிரையானது.
பிறப்புகள்[தொகு]
- மார்ச் 30 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 2015)
- டிசம்பர் 28 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (இ. 2014)
இறப்புகள்[தொகு]
- ஜனவரி 20 -ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1865)
- கோ. வடிவேலு செட்டியார், தமிழறிஞர் (பி. 1863)
- மார்ச் 13 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (பி. 1876)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - விக்டர் ஹெஸ், கார்ல் ஆன்டர்சன்
- வேதியியல் - பீட்டர் யோசப்பசு டெபாய்
- மருத்துவம் - என்றி ஹலெட் டேல், ஒட்டோ லெவி
- இலக்கியம் - இயூஜின் கொளாட்ஸன் ஓ'நீல்
- அமைதி - கார்லொசு லாமாசு (ஆர்ஜெண்டீனா]]