சூலை 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXV |
சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1044 - புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான்.
- 1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1484 - போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான்.
- 1535 - சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
- 1560 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- 1785 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.
- 1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
- 1892 - தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1893 - அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1908 - ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.
- 1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
- 1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
- 1944 - கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.
- 1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
- 1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
- 1964 - மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1966 - மலாவி குடியரசாகியது.
- 1967 - நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரை ஆரம்பித்தனர்.
- 1975 - கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1988 - வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 2005 - லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 2006 - 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1832 - முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோவின் மன்னர் (இ. 1864)
- 1870 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
- 1937 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (இ. 2014)
- 1946 - ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஐக்கிய அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி
- 1946 - சில்வெஸ்ரர் ஸ்ரலோன், அமெரிக்கத் திரைப்பட நடிகர்
- 1980 - பாவ் கசோல், எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1893 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1850)
- 1991 - என். ஆர். சின்னராசா, ஈழத்தின் தவில் மேதை (பி. 1934)
- 2002 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
- 2005 - கிளோட் சைமன், நோபல் பரிசு பெற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1913)