தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 2012.
ஆண்ட்ரூ "ஆண்டி" முர்ரே (Andrew "Andy" Murray, பிறப்பு: மே 15, 1987 ஒரு ஸ்காட்லாந்தின் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் தற்போது உலகின் நான்காவது இடத்திலும்,[1] 2009 ஆகஸ்ட் 17 முதல் 31 வரையில் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்திலும் உள்ளார்.[2] முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் ஏப்ரல் 16, 2007இல் இடம் பிடித்தார். இதுவரை மூன்று பெருவெற்றித் தொடர்களில் இறுதி ஆட்டத்தில் ஆடித் தோல்வி கண்டுள்ளார்:யூ.எசு. ஓப்பன் (2008), ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (2010), (2011). 2011ஆம் ஆண்டில் திறந்த சுற்று டென்னிசில் ஒரே ஆண்டில் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஏழாவது டென்னிசுக்காரராக சாதனை படைத்தார்.[3]2012 ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை 6-2, 6-1, 6-4 என்ற நேர் கணங்களில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.[4] 2012ல் யூ.எசு. ஓப்பன் பட்டத்தை வென்றார். இது இவரது முதலாவது பெருவெற்றி டென்னிசு பதக்கமாகும் [5]. 76 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்தவர் வெல்லும் பெருவெற்றி டென்னிசு பதக்கம் இதுவாகும். 2013ல் விம்பிள்டன் பதக்கத்தை பெற்றார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் வெல்லும் விம்பிள்டன் டென்னிசு பதக்கம் இதுவாகும்.[6]