டென்மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kongeriget Danmark
டென்மார்க் இராச்சியம்
டென்மார்க் கொடி டென்மார்க் சின்னம்
குறிக்கோள்
இல்லை
(அரசரின் குறிக்கோள்: Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke[1]
"கடவுளின் உதவி, மக்களின் இன்பம், டென்மார்க்கின் பலம்")
நாட்டுப்பண்
Der er et yndigt land (தேசிய)

அரச வணக்கம்
Kong Christian (அரசரின்)
Location of டென்மார்க்
அமைவிடம்: டென்மார்க்  (orange)

– in ஐரோப்பா  (camel & white)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
கோப்பென்ஹாகென்
[2]) 55°43′N 12°34′E / 55.717°N 12.567°E / 55.717; 12.567
ஆட்சி மொழி(கள்) டேனிஷ்1
மக்கள் டேனிஷ்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட இராச்சியம்
 -  அரசர் மார்கிரெத் II
 -  முதலமைச்சர் ஆன்டெர்ஸ் ஃபொக் ராஸ்முசென்
கூட்டமைப்பு (பழைய காலம்) 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1 1973
பரப்பளவு
 -  மொத்தம் 43094[2] கிமீ² (133வது²)
16639 சது. மை 
 -  நீர் (%) 1.6²
மக்கள்தொகை
 -  2008 மதிப்பீடு 5,432,335[3] (108வது)
 -  அடர்த்தி 129.16/கிமீ² (78வது²)
334.53/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $198.5 பில்லியன் (45வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $37,000 (6வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $256.3 பில்லியன் (27வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $46,600 (6வது)
ஜினி சுட்டெண்? (1997) 24.7 (தாழ்) (1வது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.943 (உயர்) (14வது)
நாணயம் டென்மார்க் குரோன (DKK)
நேர வலயம் CET² (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST² (ஒ.ச.நே.+2)
இணைய குறி .dk2
தொலைபேசி +45

டென்மார்க் (ஆங்கிலம்:Denmark) அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனிய மொழி: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] ( கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீற்றர்கள் (16,638.69 sq mi)[2] ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.[4] ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.

வரலாறு[தொகு]

கி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு[தொகு]

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

பிரதேசங்கள் நகரசபைகளின்
எண்ணிக்கை
டானிஷ் பெயர் தமிழ்ப் பெயர் நிர்வாக நகரம் பெரிய நகரம் (பிரசித்தியானது) மக்கள் தொகை
(அக்டோபர் 2013)
பரப்பளவு
(km²)
குடி அடர்த்தி
(km² இற்கு)
Region Hovedstaden டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் ஹிலெரொட் (Hillerød) கொபென்ஹாகென் (Copenhagen) 1,747,596 2,568.29 680.45 29
Region Midtjylland டென்மார்க்கின் மத்திய பிரதேசம் விபோர்க் (Viborg) ஆர்ஹஸ் (Aarhus) 1,276,604 13,095.80 97.48 19
Region Nordjylland டென்மார்க்கின் வட பிரதேசம் ஆல்போர்க் (Aalborg) ஆல்போர்க் (Aalborg) 580,886 7,907.09 73.46 11
Region Sjælland சீலாந்துப் பிரதேசம் சொரோ (Sorø) ரொஸ்கில்டே (Roskilde) 816,460 7,268.75 112.32 17
Region Syddanmark டென்மார்க்கின் தென் பிரதேசம் வெஜ்லே (Vejle) ஒடென்ஸ் (Odense) 1,201,955 12,132.21 99.07 22

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hendes Majestæt Dronning Margrethe II" (Danish). kongehuset.dk (Danish monarchy official website). பார்த்த நாள் 4 February 2012.
  2. 2.0 2.1 Denmark Area – Geography – Index Mundi. Retrieved 5 June 2012.
  3. Danish Ministry for Economic Affairs and the Interior
  4. "Denmark in numbers 2010". Statistics Denmark. பார்த்த நாள் 2 May 2013.



"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்&oldid=1830403" இருந்து மீள்விக்கப்பட்டது