கிரீத்தேசியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரீத்தேசியக் காலம்
145.5 - 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
K
சராசரி வளிமண்டல O2 அளவு ca. 30 % கனவளவு [1]
(150 % of modern level)
சராசரி வளிமண்டல CO2 அளவு ca. 1700 ppm[2]
(6 times pre-industrial level)
சராசரி தரை வெப்பநிலை ca. 18 °C [3]
(4 °C above modern level)
கிரீத்தேசியத்தின் முக்கிய நடப்புகள்
view • discuss • edit
-140 —
-130 —
-120 —
-110 —
-100 —
-90 —
-80 —
-70 —
கி
ரீ
த்
தே
சி

க்

கா

ம்
கிரீத்தேசியக் காலத்தின் அண்ணளவான காலக்கோடு.
அச்சு ஒப்பளவு:மில்லியன் ஆண்டுகளுக்குமுன்.

கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (உச்சரிப்பு /kriːˈteɪʃəs/) என்பது ஜூராசிக் காலத்தின் (145.5 ± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் (65.5 ± 0.3 Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது.

கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Cretaceous என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் creta என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.[4] இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.[5] ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:Phanerozoic Carbon Dioxide.png
  3. en:Image:All palaeotemps.png
  4. Glossary of Geology (3rd ed. ed.). Washington, D.C.: American Geological Institute. 1972. பக். p. 165. 
  5. (in Russian) Great Soviet Encyclopedia (3rd ed. ed.). Moscow: Sovetskaya Enciklopediya. 1974. பக். vol. 16, p. 50. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீத்தேசியக்_காலம்&oldid=1471441" இருந்து மீள்விக்கப்பட்டது