1961
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
ஆண்டுகள்: | 1958 1959 1960 - 1961 - 1962 1963 1964 |
1961 (MCMLXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 17 - பாட்றிஸ் லுமும்பா சுட்டுக்கொல்லப்பட்டார்.
- ஜனவரி 20 - ஜோன் கென்னடி ஐக்கிய அமெரிக்காவின் 35வது அதிபரானார்.
- ஏப்ரல் 12 - சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரின் விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதரானார்.
- ஏப்ரல் 21 - சோவியத் நாட்டைச்சேர்ந்த லியோநிட் (Leonid Ivanovich Rogozov) என்பவர் அண்டார்டிகா கண்டத்தில் வைத்து தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
- மே 31 - தென்னாபிரிக்கா, பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது.
- ஆகஸ்ட் 13 - பேர்லின் சுவர் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - ஸ்டாலினின் உடல் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
- டிசம்பர் 19 - கோவா, டாமன், மற்றும் டையூ 450 ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆட்சியின் பின்னர் இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது.
பிறப்புகள்[தொகு]
இறப்புகள்[தொகு]
- மே 17 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - ராபர்ட் ஹொஃப்ஸ்டட்டர் (Robert Hofstadter), ருடொல்ஃப் மொஸ்பாவர் (Rudolf Ludwig Mössbauer)
- வேதியியல் - மெல்வின் கல்வின் (Melvin Calvin)
- மருத்துவம் - ஜார்ஜ் வொன் பெக்கெவ்ஸ்கி (Georg von Békésy)
- இலக்கியம் - ஐவோ ஆண்ட்றிக் (Ivo Andric)
- சமாதானம் - Dag Hammarskjöld