சூலை 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXV |
சூலை 8 (July 8) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1099 - முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
- 1497 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
- 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தான்.
- 1815 - பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
- 1859 - சுவீடன்-நோர்வே மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான்.
- 1889 - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.
- 1892 - நியூபவுண்லாந்தின் சென் ஜோன்ஸ் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- 1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
- 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1990 - ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
- 2003 - சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
- 2006 - ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
பிறப்புகள்[தொகு]
- 1895 - ஈகர் தம், ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)
- 1906 - பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 2005)
- 1949 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (இ 2009)
- 1972 - சௌரவ் கங்குலி, இந்தியத் கிரிக்கெட் துடுப்பாளர்
இறப்புகள்[தொகு]
- 1695 - கிறிஸ்டியான் ஹைஜன்ஸ், டச்சு கணிதவியலாளர் (பி. 1629)
- 1979 - சின்-இட்டீரோ டொமனாகா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1906)
- 1979 - ரொபேர்ட் வூட்வேர்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1917)
- 1989 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (பி. 1924)
- 1994 - கிம் இல்-சுங், வட கொரியத் தலைவர் (பி. 1912)
- 2007 - சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர், (பி. 1927)