ஜனவரி 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | சனவரி 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXV |
ஜனவரி 25 (January 25) கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.
- 1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- 1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1881 - தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
- 1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
- 1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
- 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
- 1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
- 1919 - நாடுகளின் அணி நிறுவப்பட்டது.
- 1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
- 1949 - சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
- 1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
- 1955 - சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
- 1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
- 1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
- 1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
- 1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
- 1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
- 1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
- 2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.
- 2005 - இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2009 - முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1736 - ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1813)
- 1783 - வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய தொழிலதிபர் (இ. 1857)
- 1872 - பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
- 1882 - வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1941)
- 1928 - எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, ஜோர்ஜியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2014)
- 1933 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- 1938 - எட்டா ஜேம்சு, அமெரிக்க பாடகர் (இ. 2012)
- 1938 - விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், நடிகர் (இ. 1980)
- 1941 - செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்
- 1942 - எய்சேபியோ, மொசாம்பிக்-போர்த்துக்கீச காற்பந்து வீரர் (இ. 2014)
- 1958 - கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
- 1980 - சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் காற்பந்து வீரர்
- 1981 - அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை
இறப்புகள்[தொகு]
- 389 - நசியான் கிரகோரி, பைசாந்திய பேராயர், இறையியலாளர் (பி. 329)
- 844 - நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 827)
- 1922 - குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1855)
- 1947 - அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)
- 2005 - பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1906)
- 2006 - நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்
சிறப்பு நாள்[தொகு]
- ரஷ்யா:- மாணவர் நாள் (தத்தியானா நாள்)
- இந்தியா:- தேசிய வாக்காளர் தினம்