ஆகஸ்டு 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 30 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகஸ்ட் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXV |
ஆகஸ்டு 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
- 1791 - இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
- 1813 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
- 1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
- 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
- 1897 - மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
- 1918 - விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.
- 1945 - பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.
- 1984 - டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
- 1990 - தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1992 - மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
- 1999 - கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1748 - ஜாக் லூயிஸ் டேவிட், பிரெஞ்சு ஓவியர் (இ. 1825)
- 1871 - எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு, நியூசிலாந்து அணு இயற்பியல் அறிஞர் (இ. 1937)
- 1875 - சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
- 1913 - எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர், (இ. 1999)
- 1930 - வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1980 - ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
- 1980 - சுப்ரமணியம் பத்ரிநாத், இந்தியக் கிரிக்கெட் வீரர்
இறப்புகள்[தொகு]
- 1928 - வில்ஹெம் வியென், ஜேர்மனியின் இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1864)
- 1940 - ஜெ. ஜெ. தாம்சன், ஆங்கிலேய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1856)
- 1957 - என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
- 1995 - எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
- 2001 - கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
- 2006 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் புதின எழுத்தாளர் (பி. 1911)
- 2008 - கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])