டிசம்பர் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXV |
டிசம்பர் 7 (December 7) கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- கிமு 43 - ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான்.
- 1724 - போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
- 1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- 1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
- 1910 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
- 1917 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
- 1946 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 - சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
- 1966 - துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
- 1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
- 1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
- 1983 - ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1988 - ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
- 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
பிறப்புக்கள்[தொகு]
- 1928 - நோம் சோம்சுக்கி, அமெரிக்கப் பேரறிஞர்
- 1929 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)
இறப்புகள்[தொகு]
- 1947 - நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
- 1956 - லாரி பர்ட், முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர்
- 1985 - றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1895)
- 1993 - வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
- 1998 - மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)
சிறப்பு நாள்[தொகு]
- ஐக்கிய அமெரிக்கா - பேர்ள் துறைமுக நாள்
- கொடி நாள்