சூலை 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | சூலை 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXV |
சூலை 2 (July 2) கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
- 1698 - தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1823 - பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
- 1876 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
- 1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
- 1917 - ஐக்கிய அமெரிக்கா, இலினொய் மாநிலத்தில் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்க்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
- 1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
- 1941 - உக்ரைனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் நாசி ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
- 1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
- 1976 - 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.
- 1990 - மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார்.
- 2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
பிறப்புகள்[தொகு]
- 1877 - ஹேர்மன் ஹெசே, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் (இ. 1962)
- 1925 - பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் பிரதமர் (இ. 1961)
- 1941 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
இறப்புகள்[தொகு]
- 1566 - நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
- 1582 - அக்கெச்சி மிட்சுஹீடெ, ஜப்பானிய சாமுராய் (பி. 1528)
- 1961 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899