மார்ச் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXV |
மார்ச் 9 (March 9) கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1847 - ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.
- 1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
- 1923 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1956 - ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1957 - அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
- 1959 - பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
- 1967 - ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
- 1976 - இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
- 1986 - சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
- 2006 - சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
- 1923 - வால்ட்டர் கோன், நோபல் பரிசு பெற்றவர்.
- 1934 - யூரி ககாரின், விண்வெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)
- 1943 - பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க மேதை (இ. 2008)
- 1954 - பொபி சாண்ட்ஸ், ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் (இ. 1981)
இறப்புக்கள்[தொகு]
- 1974 - ஏர்ல் சதர்லாண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1915)
- 1983 - ஊல்ஃப்வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1905)
- 1992 - மெனாச்சிம் பெகின், இசுரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1913)
- 1997 - நொடோரியஸ் பி.ஐ.ஜி., ராப் இசைக் கலைஞர் (பி. 1972)