ஏப்ரல் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2016 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXVI |
ஏப்ரல் 28 (April 28) கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1192 - ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.
- 1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.
- 1876 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
- 1920 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1952 - இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
- 1965 - டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
- 1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
- 1996 - அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
- 2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
- 2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
- 2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிறப்புகள்[தொகு]
- 1758 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831)
- 1937 - சதாம் உசேன் - ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் (இ. 2006)
இறப்புகள்[தொகு]
- 1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)
- 1945 - முசோலினி, இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி (பி. 1883)
- 1955 - தி. வே. சுந்தரம் அய்யங்கார், இந்திய தொழிலதிபர் (பி. 1877
- 1999 - ஆர்தர் சவ்லோவ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)
- 2005 - தர்மரத்தினம் சிவராம், ஈழத்து ஊடகவியலாளர் (பி. 1959)