சூலை 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2017 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXVII |
சூலை 2 (July 2) கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
- 1698 - தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1823 - பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
- 1876 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
- 1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
- 1917 - ஐக்கிய அமெரிக்கா, இலினொய் மாநிலத்தில் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்க்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
- 1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
- 1941 - உக்ரைனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் நாசி ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
- 1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
- 1976 - 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.
- 1990 - மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார்.
- 2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
பிறப்புகள்[தொகு]
- 1489 – தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேயப் புனிதர் (இ. 1556)
- 1862 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1942)
- 1877 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமன்-சுவிசு எழுத்தாளர் (இ. 1962)
- 1902 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர் (இ. 1968)
- 1903 – அலெக் டக்ளஸ் - ஹோம், 66வது ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1995)
- 1906 – ஹன்ஸ் பேடா, German-நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
- 1923 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் (இ. 2012)
- 1925 – பத்திரிசு லுமும்பா, 1வது கொங்கோ அரசுத்தலைவர் (இ. 1961)
- 1929 – இமெல்டா மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது முதல் பெண்மணி
- 1930 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர் (இ. 2005)
- 1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
- 1942 – வீ. மாரியப்பன், மலேசிய எழுத்தாளர்
- 1946 – சே. மாணிக்கம், தமிழக எழுத்தாளர்
- 1946 – ரிச்சார்ட் ஆக்செல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
- 1947 – வீ. கு. சந்திரசேகரன், மலேசிய எழுத்தாளர்
- 1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2014)
- 1958 – மயில்சாமி அண்ணாதுரை, தமிழகப் பொறியலாளர், விண்வெளி ஆய்வாளர்
- 1986 – லின்சி லோகன், அமெரிக்க நடிகை
- 1990 – மார்கோட் ரொப்பி, ஆத்திரேலிய நடிகை
இறப்புகள்[தொகு]
- 1566 – நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
- 1621 – தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560)
- 1778 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், இசையமைப்பாளர் (பி. 1712)
- 1843 – சாமுவேல் ஹானிமன், செருமன் மருத்துவர் (பி. 1755)
- 1949 – கியார்கி திமித்ரோவ், பல்கேரிய அரசியல்வாதி (பி. 1882)
- 1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899)
- 1977 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1899)
- 1992 – காமரோன் தே லா ஈஸ்லா, எசுப்பானியப் பாடகர் (பி. 1950)
- 2013 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்தவர் (பி. 1925)