சூலை 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 22 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2017 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXVII |
சூலை 22 (July 22) கிரிகோரியன் ஆண்டின் 203 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 204 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.
- 1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.
- 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.
- 1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
- 1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
- 1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
- 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
- 2009 - சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1559 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)
- 1904 – தொ. மு. பாஸ்கர தொண்டைமான், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1965)
- 1915 – வாணிதாசன், புதுவைக் கவிஞர் (இ. 1974)
- 1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)
- 1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
- 1943 – மசாரு இமோடோ, சப்பானிய ஆய்வியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
- 1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர்
- 1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி
- 1953 – எஸ். பி. சைலஜா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகி
- 1970 – தேவேந்திர பத்னாவிசு, மகாராட்டிராவின் 18வது முதலமைச்சர்
- 1982 – தில்ருவன் பெரேரா, இலங்கை துடுப்பாட்ட வீரர்
- 1983 – நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
- 1992 – செலெனா கோமஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்[தொகு]
- 1619 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559)
- 1676 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1590)
- 1832 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன், பிரெஞ்சுப் பேரரசன் (பி. 1811)
- 1967 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1878)
- 1968 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி (பி. 1886)
- 1972 – டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1914)
- 2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்[தொகு]
- π அண்ணளவு நாள்
- மர்தலேன் மரியாள் திருவிழா நாள்