சூலை 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2017 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXVII |
சூலை 23 (July 23) கிரிகோரியன் ஆண்டின் 204 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 205 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.
- 1793 - புரூசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- 1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
- 1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
- 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.
- 1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.
- 1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.
- 1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
- 1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.
- 1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
- 1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.
- 1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
- 1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
- 1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
- 1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
- 1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
- 1999 - மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
- 2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
பிறப்புகள்[தொகு]
- 1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
- 1890 – பெரி. சுந்தரம், 1957) இலங்கையின் தமிழ் அரசியல்வாதி (இ. 1957)
- 1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)
- 1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
- 1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்
- 1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)
- 1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்
- 1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்
- 1953 – நஜீப் துன் ரசாக், 6வது மலேசியப் பிரதமர்
- 1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)
- 1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (இ. 2014)
- 1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்
- 1975 – சூர்யா, தமிழக நடிகர்
- 1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்
- 1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்
- 1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்[தொகு]
- 1577 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504)
- 1885 – யுலிசீஸ் கிராண்ட், 18வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1822)
- 1925 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)
- 1942 – வால்டெமர் பவுல்சன், டென்மார்க் பொறியியலாளர் (பி. 1869)
- 1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
- 1957 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)
- 1976 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (பி. 1890)
- 2012 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (பி. 1951)
- 2012 – இலட்சுமி சாகல், இந்திய அரசியல்வாதி (பி. 1914)
- 2013 – மஞ்சுளா விஜயகுமார் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1953)
- 2014 – சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
சிறப்பு நாள்[தொகு]
- குழந்தைகள் நாள் (இந்தோனேசியா)
- புரட்சி நாள் (எகிப்து, 1952)