இன்றைய ராசிபலன்

30செப்டம்பர்2020

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் செப்டம்பர் - 30- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷராசி அன்பர்களே!

தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் உதவி செய்வார்கள். இன்று சரபேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.