You are here: Home // சினிமா // பீட்சா 2 கைவிட்டதால் கல்யாண சமையல் சாதம் பரிமாறும் சி.வி.குமார்!

பீட்சா 2 கைவிட்டதால் கல்யாண சமையல் சாதம் பரிமாறும் சி.வி.குமார்!

cv-kumar
அட்டக்கத்தியில் ஆரம்பித்த திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சிவி குமாரின் சினிமா தயாரிப்பு பயணம் பீட்சா, சூது கவ்வும் வரைக்கும் நல்லாத்தான் போயிட்டிருந்தது. வில்லா 2 வோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்து திரையரங்குக்குப் போய்விட்டார்கள் ரசிகர்கள், எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போக படமோ சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லா கைவிட்டதை அடுத்து பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் உருவான கல்யாண சமையல் சாதம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார் சிவிகுமார். இந்தப் படத்தை தயாரித்தவர் பிரசன்னாவை வைத்து ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கிய அருண் வைத்யநாதன்தான்.  இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பெயரும் பிரசன்னாதான். கல்யாண சமையல் சாதம் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த சிவி குமாருக்கு படம் நன்றாகவே பிடித்துப் போய்விட்டதாம். அப்புறம் என்ன, உடனடியாக தயாரிப்பாளர் அருண் வைத்யநாதனிடம் இருந்து வாங்கி தானே ரிலீஸ் செய்கிறார் சிவி குமார்.

Tags: , , , , , , , , , , , , ,

Copyright © 2009 TamilNews24x7. All rights reserved.
[x]