அதிர்ச்சி: ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி || Shocking RBI prints Rs 1,000 denomination faulty currency notes
Logo
சென்னை 21-01-2016 (வியாழக்கிழமை)
அதிர்ச்சி: ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி
அதிர்ச்சி: ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி
புதுடெல்லி, ஜன.21-

முப்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் வெள்ளி இழை இல்லாமல், 5AG, 3AP என்ற வரிசைக்கிரமத்தில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பொங்கல் சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.148 கோடி வருமானம்

சென்னை, ஜன.21–பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.கடந்த ஆண்டு 9.1.2015 முதல் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif