முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தேர்தல் கூட்டணிக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன
மாயா
வாரணம் ஆயிரம்: "தமிழ்" மேனனின் மொழிப் பதற்றம்
ஆர்.அபிலாஷ்
செம்மொழிநாடகம்
இந்திரா பார்த்தசாரதி
மொழி இலக்கியக் கல்வியின் பின்னடைவுகள்
ராமசாமி
அபே சாதா எனும் பெயர்கொண்ட ஒரு பெண்
யமுனா ராஜேந்திரன்
காமெடியும் கீமாவடையும்
சுதேசமித்திரன்
பாரடி நீ மோகினி
ஸ்ரீபதி பத்மநாபா
பூமி பெரிசா நகை பெரிசா?
இந்திரஜித்
போதையில் மிதக்கும் மனிதர்கள்
ந. முருகேச பாண்டியன்
காணாமல் போன கதை சொல்லிகள்
வாஸந்தி
மனநிறைவும் மனச்சுமையும்-வண்ணநிலவனின் "குளத்துப்புழை ஆறு"
பாவண்ணன்
நேர்காணல் : மார்க்சியமும் இன்றைய உலகமும் மன்சூர் ஹிக்மத்
தமிழில் எச்.பீர்முஹம்மது
அலறல்களுக்கும் முணுமுணுப்புகளுக்குமிடையே
சி.வி. பாலகிருஷ்ணன்
இலங்கை தமிழர்களின் அவல நிலை
பாஸ்கர்
இருபதாம் நூற்றாண்டு இலக்கியவரலாற்றில் தமிழ்த்தன்மை
தமிழவன்
பெண்.....
செல்லமுத்து குப்புசாமி
வால் ஆடியபோது.....
மனோஜ்
கவிதை
வானுக்கு வண்ண‌மேற்றுதல்
லாவ‌ண்யா
நான்
றஞ்சினி
அந்தம்
சரவணன்
சிறுகதை
சிலந்தி
மதியழகன் சுப்பையா
பொது
நம்பியார் - பரங்கிமலை!
தமிழ்மகன்
பாமரர் பாட்டில் பாலியல் சுவடுகள்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
கல்லைத்தான் மண்ணைத்தான். . .
பாபுஜி
Connecting People
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழாக்கம்:ஆர்.அபிலாஷ்
பழமொழிகளும் சொலவடைகளும்
அறிவுடையினரை அடுத்தால் போதும்.
கழனியூரன்
சிறுகதை
கழனியூரனுக்கு வீர. வேலுச்சாமி எழுதியது.
-
பொது
“அநங்கம்”
-
சிற்றிதழ் பார்வை
ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
-
பழமொழிகளும் சொலவடைகளும்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா
ஜெயக்குமார்
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
-
சிலந்தி
மதியழகன் சுப்பையா

இருள் என்றால் இரவு நினைவுக்கு வருகிறது. இரவு என்றால் இருள் நினைவுக்கு வருகிறது. இருள் எல்லாம் இரவாகி விடுமா என்ன. ஆனாலும் இரவுக்கும் இருளுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. இரவு ஏற ஏற இருள் மட்டுமல்ல அமைதியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நடுநிசியில் இருளும் அமைதியும் இரண்டர கலந்து விடுகிறது. மீண்டும் பொழுது புலரப்புலர இருள் வழிந்து. அமைதி பொட்டாய் கிழிகிறது.

அந்த அறையில் அத்தனைப் பொருளையும் இருள் அப்பியிருந்தது. வெளியிலிருந்து வெளிச்சமோ சத்தமோ நுழைந்து விடாவண்ணம் அறையின் அத்தனை துவாரங்களும் அடைக்கப் பட்டிருந்தது. அவசியப் படுகையில் அடைப்புகள் திறக்கப் படும். அடைப்புகளைத் திறக்கும் மனிதன் அமைதியின் அரவணைப்பில் இருளின் மடியில் படுத்திருந்தான். அவன் படுத்திருப்பது இருளுக்கு மட்டுமே தெரியும். கட்டிலும் மெத்தையும் அவனைக் காணாது அவன் படுத்திருப்பதை உணர மட்டுமே செய்தது.

அந்த கணத்த அமைதியை அடித்து உடைத்தபடி ஒலித்தது மேஜை கடிகார மணியோசை. அந்தக் கனத்த இருட்டிலும் மங்களான வெளிச்சத்தில் ஒடிக்கொண்டிருந்த கனவுப் படம் ஒவ்வொரு சட்டமாய் அழிந்து கனவுத் திரை படிப்படியாய் காட்சிகள் இழந்து வெளிச்சம் பொய் இருளுடன் கலந்து கலைந்து போனது. மெளிதாய் தொடங்கி கடிகார மணியோசை வலுத்துக் கொண்டே போனது.

அதிர்ந்து எழுந்தான் அவன். கடிகாரத்தின் தலையில் ஓங்கி அடித்தான். கடிகாரம் அமைதியானது. கண்களின் பிசுபிசுப்பு கண் திறக்க சிரமத்தை ஏற்படுத்தியது. போர்வையால் கண்களை துடைத்துக் கொண்டு கண் திறக்க முயன்றான். கடும் எரிச்சல் காரணமாய் கண்களில் நீர் பெருகி விட்டது. மீண்டும் கண்களை அழுத்தித் துடைத்து விட்டு எழுந்து அமர்ந்தான். வீட்டில் அப்பியிருந்த இருளில் எல்லாப் பொருட்களும் இருளாய் தெரிந்தது. எதற்கும் உருவமில்லை. எல்லாவற்றையும் இருள் விழுங்கி இருந்தது. அவன் கண்களை இரண்டு கைகளாலும் ஒத்தி எடுத்தான். அவன் கண்களின் ஒளி மூலம் இருளிலிருந்து ஒவ்வொரு பொருளையும் மீட்டு எடுக்க முயன்றான்.

தன்னிடம் அடிவாங்கிய கடிகாரத்தை தேடினான். அருகில் இருந்த மின் விளக்குப் பொத்தானைத் தடவித் தேடி அழுத்தினான். மின் விளக்கும் இருளின் பிடியில் சிக்கியதோ என்னவொ ஒளிக்கவில்லை. பொருட்களை அதன் வடிவங்கள் மூலம் அறிந்து கொண்டான். கடிகாரம் கைப்பட்டுவிட்டது. எடுத்துப் பார்த்தான். மணி என்னவோ மாறுபட்டிருந்தது. வழக்கமான நேரமல்ல. அது வழக்கத்திற்கு முந்தைய நேரமும் இல்லை. பிந்தைய நேரமும் இல்லை. ஏதோ கோளாறு இருக்கக் கூடும். ஒடி ஓடி கடிகார முட்கள் களைத்துப் போயிருக்கலாம். இல்லையேல் வட்ட சட்டத்துக்குள் வட்டமடித்துச் சோர்ந்து போயிருக்கலாம். அல்லது நிம்மதியாய் தூங்கும் இவனை எழுப்பி குழப்ப திட்டமிட்டிருக்கலாம் என்னவோ ஆனால் ஏதோ ஒன்று வழக்கத்திற்கு மாறாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தான்.

கடிகாரத்தை உற்றுப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிர்ச்சி ஆத்திரமாய் மாறியது. கடிகார முட்களுக்கு இடையே ஓர் சிலந்தி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. சிலந்திகளை இவனுக்குப் பிடிக்காது. பூச்சி இனங்களை அடியோடு வெறுப்பவன். வெறுப்பதற்கான காரணம் தெரியாது அவனுக்கு. அவன் சிலந்திகளை வெறுப்பதாக இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. வீட்டின் சுவற்று மூலைகளில் மற்றும் இடுக்குகளில் சிலந்தியின் வளைக் கூட்டை கண்டால் அவற்றை உடைத்து துடைத்தெரிந்த பிந்தான் அமைதியடைவான். சிலந்திகளை கொஞ்சமும் பிடிக்காத அவன் வீட்டில் ஏராளமான சிலந்திகள் வாழ்ந்து கொண்டிருந்தது. அவன் கையில் அகப்படும் சிலந்திகளை ஊசியால் பலகையில் குத்தி வைத்து சித்திரவதை செய்வான். சிலந்திகளின் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்று அவனுக்குத் தெரியாது. அவை எப்பொழுது புணர்கின்றன என்று பார்த்ததில்லை அவன். அவற்றில் ஆண் பெண் பால்களின் வேறுபாடு தெரியாது. சிலந்திகளைப் பற்றி அவன் அறிய முனைந்ததில்லை. ஆனால் அவற்றை அழிக்க வழிகள் பல கற்றுத் தேர்ந்திருந்தான். ஆனாலும் அவற்றை ஊசியால் குத்தி வைத்து விடுவதையே பெரிதும் விரும்பினான். அவன் எத்தனை சிலந்திகளை ஊசியில் குத்திக் கொன்றிருந்தானோ அத்தனையும் உயிர்த்தெழுந்து வந்தததைப் போல் மீண்டும் வளைகளைப் பின்னி தொங்கிக் கொண்டிருந்தன.

அவனுடைய வீட்டின் அத்தனை அறைகளில் மட்டுமல்லாது. உணவு, தண்ணீர், உடுத்தும் உடைகள் என எங்கும் பரவியிருந்தது சிலந்திகள். இன்று கடிகாரத்தின் உள்ளே. கடிகாரத்தின் பின்பக்கமுள்ள காதுகளை ஆத்திரத்துடனும் அவசரத்துடனும் திருகினான். அவன் திருகல் வேகத்திற்கேற்ப பெரியமுள் வேகமாயும் சின்னமுள் நிதானித்தும் சுற்றிக் கொண்டிருந்தது. முட்களின் கூர்மையில் சிக்காமல் சிலந்தி வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவன் கடிகாரத்தின் பின்பக்க காதுகளை இன்னும் பலமாய் திருகினான். முட்களால் அதை துரத்தினான். இறுதியாய் இரண்டு முட்களுக்கு இடையே சிக்குண்டு சிதைந்து போனது சிலந்தி. அவன் உடலெங்கும் மகிழ்ச்சி பரவியது. கொண்டாட வேண்டும்போல் எழுந்தான்.

கடிகாரத்தை மேஜைமேல் வீசினான். ஒருக்களித்து விழுந்தது கடிகாரம். அதுவரை கடிகாரத்தை மட்டுமே பார்த்திருந்த அவனுக்கு கடிகாரத்தின் காதுகளை திருகுகையில் வீட்டில் வெளிச்சமும் இருளும் மாறிமாறி வந்து போனதை உணரவில்லை. இப்பொழுது வீடு வெளிச்சமாய் இருந்தது. மின் விளக்குகள் இயக்கப் படவில்லை. குழப்பத்தில் தடுமாறி எழுந்தான். ஜன்னலைத் திறந்தான். உலகம் பிரகாசமாய் விரிந்தது. அவன் கண்கள் இயல்புக்கு மாறாய் இன்னும் பெரிதானது. எதிரே அந்த கருப்பு கோட்டுக்காரன். சதா சொரிந்து கொண்டும் முகம் முழுக்க முடியாக தாடை முடியில் எச்சில் தொங்க காதுகளில் திட்டுத்திட்டாய் அழுக்குப் படிந்த செம்பட்டைத் தலையுடன் எப்பொழுதும் இவனைப் பார்த்து சிரித்து கையேந்தும் அந்தப் பிச்சைக்காரன். 
  
அவன் வியப்படைந்ததில் விஷயம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முந்தான் அவன் இறந்து போயிருந்தான். மிகுந்த குழப்பத்துடன் மீண்டும் வீட்டிற்குள் வந்தான். கட்டிலில் அமர்ந்து கடுமையாய் யோசித்தான். அவன் இறந்தது போல் கனவு கண்டிருப்போமோ என தீவிரமாய் மூளை கசக்கினான். வேகமாய் எழுந்து ஜன்னல் வழியே  பார்த்தான். இல்லை கனவில் அல்ல நிஜத்தில் அவன் இறந்துதான் போய்விட்டான். எப்படி உயிர்த்தெழுந்தான். இவனும் சிலந்தியா என்ன? அவனால் அதையும் தீர்மானிக்க முடியவில்லை. மெதுவாய் நடந்து குளிர்சாதப் பெட்டியைத் திறந்தான். நேற்று இரவு தீர்ந்து போயிருந்த விஸ்கி பாட்டில் நிரம்பி இருந்தது. அத்தோடு மூன்று நாட்களுக்கு முன் வாங்கிய பீர் பாட்டில்களும் அப்படியே  இருந்தன. பெட்டியின் கதவை மூடிவிட்டு வாசல் கதவைத் திறந்தான். பக்கத்து வீட்டு அங்கிள் செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தார். இவன் வெளியில் வந்ததும் அவனைப் பார்த்து குட்மார்னிங் சொன்னார். இனி தனது மகனை அழைத்து செடிகளின் இலைகளை வெட்டிவிட கத்தரி கேட்பார். அப்படித்தான் மூன்று நாட்களுக்கு முன் நடந்தது. அவ்வாறே நிகழ்ந்தது. இன்று விடுமுறைதானே என்று அங்கிள் கேட்க இதோ கிளம்பி விடுவேன் என்று இவன் பதில் சொல்ல வேண்டும். அப்படித்தான் நினைவு. மாற்றிச் சொல்லலாம் என நினைத்தான் அதற்குள் ஏற்கனவே கேட்டபடி அவர் கேட்டுவிட ஏற்கனவே சொன்ன பதிலை சொல்லி விட்டான். விடுமுறை நாளும் வேலையா என அவர் முடித்தார்.

அவன் உணரத் துவங்கினான் தான் மூன்று நாட்கள் பின் சென்று விட்டோம் என்பதை அவனால் நிச்சயமாக உணரமுடிந்தது. நாட்காட்டியைப் பார்த்தான் மூன்று நாட்களுக்கு முந்தைய தேதி இளித்தது. கட்டிலில் மல்லாந்து படுத்தான். அவன் உடலெங்கும் சிலந்தி வலைகள் பின்னப் படுவது போல் இருந்தது. வலை இறுகிக் கொண்டே போனது. மூச்சுத் தினறினான். மூன்று நாட்களுக்கு முன் இப்படியில்லை.......

ரெஜினா, அழகு தேவதையவள். இருபத்துமூன்று வயதிலும் பதினைந்து வயது பெண்ணைப் போல் உடல்வாகும், பேச்சும், குறும்பும், அழகும் இருந்தது. மூளையும் அப்படித்தான். அலுவலகத்தில் அவளை நேசிக்காதவர்கள் யாருமில்லை. அவனும்தான். ஆனால் அவன் அவளை நேசித்தது போல் யாரும் நேசித்திருக்க மாட்டார்கள். அவளுக்கும் இவன் மீது ஒரு தனி அக்கறை. அவள் அலுவலகத்தில் ஆண்கள் இருக்குமிடத்தில்தான் அதிகம் இருப்பாள். ஆனால் எல்லோரும் அவளைத் தனிமையில் சந்திக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருப்பார்கள். அவளும் இசைந்து விடுவாள். வாரத்தின் அத்தனை நாட்களும் அலுவலகம் முடிந்து மாலைப் பொழுதை யாருடனாவது கழித்துவிட்டுத்தான் போவாள். நட்பில் அதிக நாட்டம் கொண்டவள். நட்பில் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை என்று சொல்லும் அவள் அதிகபட்சமாக ஆண்களையே நண்பர்களாகக் கொண்டிருந்தாள். அவள் இவனுக்காக படைக்கப் பட்டவள் என்று எண்ணி மகிழ்வான். அவள் தேவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றை செய்து அவளை மகிழ்விப்பான். இதனால்தான் அவனை இவளுக்கும் அதிகம் பிடித்துப் போனது. அலுவலகம் முடிந்ததும் சந்திக்கத் துவங்கினார்கள். வாரம் ஒருமுறை என்றதுபோய் இப்பொழுது வாரம் நான்கைந்து நாட்கள் சந்தித்து மகிழ்தார்கள்.  
 
அவள் கூப்பிடும் போதெல்லாம் எந்த வேலையாயினும் விட்டுவிட்டு ஓடிவிடுவான். இன்னும் அவள் தொட்டுப் பேச அனுமதிக்கவில்லை. ஆனாலும் இவள் வாழ்வின் ஒவ்வொரு நுண்நொடியும் அவளை நினைத்தே நகர்ந்து கொண்டிருந்தது. அவளை வாழ்க்கைத் துணையாக்க எண்ணியிருந்தான். பல சந்தர்ப்பங்களில் அவளும் அதையே விரும்பினாள். நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. அவள் மீதான ஆசை அதிகரித்துக் கொண்டே போனது. இனியும் பொறுக்காது என அவளைத் தன்னுடன் வந்து வாழும்படி கேட்டான். அவள் கொஞ்சம் காலமாகட்டும் என்றாள். காரணம் சொல்லவில்லை. இவன் இதே கேள்வியை அடிக்கடி கேட்கலானான். அவள் இவனைச் சந்திப்பதை நிறுத்தி விட்டாள். வேலையைக் காரணம் காட்டி பேசவும் மறுத்து வந்தாள். இவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவன் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டான். தன்னை தவிர்ப்பதற்கான காரணம் கேட்டான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னைத் தனிமையில் விடுயென அவள் சிடுசிடுத்தாள். இது அடிக்கடி தொடர்ந்தது.
     
அவள் வேறு யாரையோ நேசிப்பதாய் சந்தேகப்பட்டான். அதை அவளிடமே கேட்டும் விட்டான். அவள் அவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். இவன் குழப்பத்திற்கு அடிமையானான். சிலந்திகளை விடவும் பெரிதாய் அவளை வெறுத்தான். எல்லாம் சூன்யமாகி விட்டதாய் உணர்ந்தான். விடுமுறை நாளன்று உணர்வில்லாமல் அலுவலகம் சென்றான். அலுவலகத்தில் முக்கிய வேலையென ஓரிருவர் மட்டும் வந்திருந்தனர்.

சிறுநீர் கழிக்க சென்றவனுக்கு கோப்புகளைப் போட்டு வைத்திருக்கும் அறையிலிருந்து முனகல் சத்தம் கேட்டது. அந்த அறையில் இதுவரை அவன் நுழைந்தது கிடையாது. காரணம் கோப்புகள் என்னும் குப்பைகளில்தான் அதிகம் சிலந்திகள் தங்கும். அதனால் சிலந்திகளை வெறுக்கும் இவன் அந்த அறையையும் வெறுத்து வந்தான். இன்று அந்த முனகல் சத்தம் அவனை அந்த அறையை எட்டிப் பார்க்க நிர்பந்தித்து விட்டது. ஒருக்களித்து இருந்த கதவை மெல்லத் திறந்தான். அறை முழுவதும் சிலந்திகள். விதவிதமாய் சிலந்திகள். சிலந்திகளுக்கு நடுவே நிர்வாணமாய் கிடந்தாள் ரெஜினா. அவள் அங்கம் முழுவதும் பிசுபிசுப்பாய் சிலந்தி வலைகள் பின்னப் பட்டுக் கிடந்தாள். அவளது உடல் துவாரங்கள் ஒவ்வொன்றின் அளவுக்கு ஏற்ப சிறிய பெரிய என சிலந்திகள் சிந்திக் கொண்டிருந்தது. ராட்சத வடிவ சிலந்தி ஒன்று அவளைப் புணர்ந்து கொண்டிருந்தது. அவள் மெல்லத் திரும்பி அவனைக் கண்டு புன்னகைத்தாள்.
 
வெடித்துச் சிதரி ஓடி வந்தாள். இதுநாள் வரை அவள் அலுவலக நேரங்களில் கோப்புகளைப் போட்டு வைக்கும் அறைக்கு அடிக்கடி சென்று வந்ததன் காரணம் அவனுக்குத் தெரிந்தது கைகளில் ஊசிகள் இல்லை அதனால் ஓடினான். எதிர்பட்ட எல்லாவற்றிலும் மோதி விழுந்து காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடினான். வீடு வந்தடைந்ததும் கதவைச் சாத்தி கட்டிலில் சாய்ந்தான்.
    
தனது சுவாசம் திணறுவதை உணர்ந்தான். தான் சிலந்தி வளையால் பின்னப்பட்டுக் கிடப்பதையும் வலை கொஞ்சம் கொஞ்சமாக இறுகி வருவதையும் உணர்ந்தான். பலம் முழுவதையும் கூட்டி வலைகளை அறுத்து எறிந்தான். உடலின் பிசுபிசுப்பு போக குளித்தான். 
  
குளியலறையிலிருந்து வெளியில் வந்தான். கொஞ்சம் உற்சாகமாக தயாரானான். ஆடைகளை அணிந்து கொண்டான். கதவைப் பூட்டி வெளியில் கிளம்பினான். பக்கத்து வீட்டு அங்கிளுக்கு ''பை'' சொன்னான். கருப்புக் கோட்டு பிச்சைக்காரன் சிரித்தபடி பிச்சைக் கேட்டான். அவனுக்கு காசுகளை போட்டு விட்டு வேகமாக நடந்தான். தன்னால் இயன்ற அளவு தன்னுடன் ஊசிகளை எடுத்துக் கொண்டான். ஊசிகளின் கனத்தால் அவன் நடை மெதுப்பட்டது. ஆனாலும் காலம் தவறிவிடக் கூடாது எனபதற்காக விரைந்தான். அலுவலக வளாகத்தில் தோட்டப் பணிகள் செய்பவர்கள் குத்தி வைத்திருந்த இரும்பு கடப்பாறையையும் எடுத்துக் கொண்டான். அவனிடமுள்ள ஊசிகள் எல்லாவற்றையும் விட இந்த ஊசி பன்மடங்கு பெரிது. வேகமாய் மாடிப்படி ஏறி கோப்புகள் இருக்கும் அறையை நோக்கி விரைந்தான். முனகல் சத்தம் ஒருக்களித்தக் கதவு. கதவை மெல்லத் திறந்தான். எதிர்பார்த்தது போல் சிலந்திகள் அறையெங்கும் சிலந்திகள். நிர்வாணமாய் மல்லாந்து படுத்திருந்தாள் ரெஜினா. இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். சிலந்திகள் இவனை நோக்கி ஊர்ந்தன. ஊசிகளை எடுத்து சிலந்திகளை குத்தினான். சிலந்திகள் வேகத்திற்கும் எண்ணிக்கைக்கும் இவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. தன்னிடமுள்ள பெரிய ஊசியான கடப்பாறையை எடுத்தான் அதற்குள் அவன் உடலெங்கும் ஊறத் தொடங்கி விட்டது சிலந்திகள். அவற்றை உதறியபடி கடப்பாரையை  தலைக்கு மேல் தூக்கி ரெஜினாவை புணர்ந்து கொண்டிருந்த சிலந்தியைக் குத்தினான்.
   
சிலந்தியின் உடல் தாண்டி ரெஜினாவின் உடல் தாண்டி கடப்பாறை தரையைக் குத்தி நின்றது. இரத்தம் பீரிட்டு சிந்தியது. ரெஜினா இன்னும் புன்னகை செய்து கொண்டிருந்தாள். தன்மேல் அப்பியிருந்த சிலந்திகளை தட்டியவாறு அலறியடித்துக் கொண்டு ஓடினான் அவன். அலுவலகமெங்கும் சிலந்திகள். சாலையெங்கும் சிலந்திகள். மரமெங்கும் தொங்கும் சிலந்திகள். அத்தனை வேகமாய் இதுநாள் வரை அவன் ஓடியிருக்க மாட்டான். இதுநாள் வரை அவன் அத்தனை அதிகமான சிலந்திகளை கண்டதும் இல்லை. எங்கும் சிலந்திகள். கீழே, மேலே மட்டுமல்ல திசைகள் எட்டும் சிலந்திகள். அவனால் ஒட்டத்தை தொடர முடியவில்லை. மூச்சிரைக்க விழுந்தான். அவன் உடல் துவாரங்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் சிலந்திகள் போய்க் கொண்டிருந்தது.
     
 கட்டில் மேல் மல்லாந்து படுத்திருந்தான். இருட்டைக் கிழித்துக் கொண்டு கடிகாரம் ஒலித்ததுக் கொண்டே இருந்தது.
     
 உள்ளே மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது சிலந்தி.


உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com