தரவுக் கொள்கை

Facebook, Instagram, Messenger மற்றும் Facebook வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் அம்சங்களை (Facebook தயாரிப்புகள் அல்லது தயாரிப்புகள்) ஆதரிப்பதற்காக நாங்கள் செயல்படுத்தும் தகவல்கள், இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளன. Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகளில் கூடுதல் கருவிகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

எந்த வகையான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்?

Facebook தயாரிப்புகளை வழங்க, உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அவசியம் செயல்படுத்த வேண்டும். நாங்கள் எந்த வகையான தகவல்களைச் சேகரிக்கிறோம் என்பது எங்கள் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அமையும். Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எப்படி அணுகலாம், நீக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நீங்களும் பிறரும் மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் வழங்கும் தகவல்கள்.
  • நீங்கள் வழங்கும் தகவல்களும் உள்ளடக்கமும். ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது பகிர்தல், பிறருக்குச் செய்தி அனுப்புதல் அல்லது அவர்களைத் தொடர்புகொள்ளுதல் உட்பட எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, நீங்கள் வழங்கும் உள்ளடக்கம், தகவல்தொடர்புகள் மற்றும் பிற தகவல்களை நாங்கள் சேகரிப்போம். படத்தின் இருப்பிடம் அல்லது கோப்பினை உருவாக்கிய தேதி போன்று நீங்கள் வழங்கிய உள்ளடக்கத்தில் உள்ள தகவல்கள் அல்லது அவற்றைப் பற்றிய தகவல்கள் (மீத்தரவு போன்றவை) இதில் அடங்கும். எங்கள் கேமரா போன்ற, நாங்கள் வழங்கிய அம்சங்களில் நீங்கள் பார்ப்பவையும் இதில் அடங்கும். இதன் மூலம், நீங்கள் விரும்பும் முகமூடிகள் மற்றும் வடிகட்டிகளைப் பரிந்துரைப்பது அல்லது நீளவாக்குப் பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளை உங்களுக்கு வழங்குவது போன்றவற்றை எங்களால் செய்ய முடியும். சூழல் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அவற்றை ஆராய, நீங்களும் பிறரும் வழங்கிய உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகளை எங்கள் அமைப்புகள் தானாகவே செயல்படுத்தும். நீங்கள் பகிர்வதை யாரெல்லாம் பார்க்க முடியும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி மேலும் அறிக.
    • சிறப்புப் பாதுகாப்புகளைக் கொண்டுள்ள தரவு: உங்கள் Facebook சுயவிவரப் புலங்கள் அல்லது வாழ்க்கை நிகழ்வுகளில், உங்கள் மத நம்பிக்கைகள், அரசியல் சார்புகள், "நட்புக்கான விருப்பம்" அல்லது உங்கள் உடல்நலம் பற்றிய தகவலை வழங்க, நீங்கள் தேர்வுசெய்யலாம். இதுவும் பிற தகவல்களும் (இனம் அல்லது இனக்குழுரீதியான தோற்றம், தத்துவரீதியான நம்பிக்கைகள் அல்லது தொழிற்சங்க மெம்பர்ஷிப் போன்றவை) ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்குக் கீழ் சிறப்புப் பாதுகாப்பிற்கு உட்பட்டது.
  • நெட்வொர்க்குகள் மற்றும் இணைப்புகள். எங்கள் எல்லாத் தயாரிப்புகளிலும் நீங்கள் அதிகமாகத் தொடர்புகொள்பவர்கள் அல்லது பங்கெடுத்துள்ள குழுக்கள் போன்று, நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்கள், பக்கங்கள், கணக்குகள், ஹேஷ்டேகுகள் மற்றும் குழுக்கள், அவர்களுடன் தொடர்புகொள்ளும் முறை போன்ற தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். உங்களுக்கும் பிறருக்கும் நீங்கள் அறிந்திருக்கக்கூடியவர்களைக் கண்டறிய உதவுவது மற்றும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பிற நோக்கங்கள் போன்றவற்றுக்கு, சாதனத்திலிருந்து நீங்கள் தொடர்புத் தகவல்களைப் பதிவேற்ற, ஒத்திசைக்க அல்லது இறக்குவதற்குத் தேர்வுசெய்தால் (முகவரிப் புத்தகம் அல்லது அழைப்புப் பதிவு அல்லது SMS பதிவு வரலாறு போன்றவை), அதையும் சேகரிப்போம்.
  • உங்கள் உபயோகம். நீங்கள் பார்க்கும் அல்லது ஈடுபடும் உள்ளடக்க வகைகள்; பயன்படுத்தும் அம்சங்கள்; மேற்கொள்ளும் செயல்கள்; தொடர்புகொள்ளும் நபர்கள் அல்லது கணக்குகள்; மற்றும் உங்கள் செயல்களின் நேரம், கால இடைவெளி மற்றும் கால அளவு போன்று, எங்கள் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய தகவல்களைச் சேகரிப்போம். எடுத்துக்காட்டாக, எங்கள் தயாரிப்புகளை எப்போது பயன்படுத்துகிறீர்கள் மற்றும் கடைசியாக எப்போது பயன்படுத்தினீர்கள் என்பதையும், எங்கள் தயாரிப்புகளில் எந்த இடுகைகள், வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதையும் பதிவுசெய்வோம். எங்கள் கேமரா போன்ற அம்சங்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவலையும் சேகரிப்போம்.
  • எங்கள் தயாரிப்புகளில் செய்த பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள். எங்கள் தயாரிப்புகளைப் பணம் செலுத்துவதற்கு அல்லது பிற நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தினால் (கேமில் ஏதாவது வாங்குதல் அல்லது நன்கொடை அளித்தல் போன்று), அந்தப் பணம் செலுத்துதல் அல்லது பரிவர்த்தனை பற்றிய தகவல்களைச் சேகரிப்போம். உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண் மற்றும் பிற கார்டு தகவல்கள், பிற கணக்கு மற்றும் அங்கீகாரத் தகவல்கள் மேலும், பில்லிங், ஷிப்பிங் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற உங்கள் கட்டணத் தகவல்கள் இதில் அடங்கும்.
  • பிறர் மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் உங்களைப் பற்றி அவர்கள் வழங்கும் தகவல்கள். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, பிறர் வழங்கும் உள்ளடக்கம், தகவல்தொடர்புகள் மற்றும் தகவல்களையும் பெற்று ஆய்வு செய்வோம். உங்கள் படத்தைப் பிறர் பகிரும்போதோ அல்லது கருத்துத் தெரிவிக்கும்போதோ, உங்களுக்குச் செய்தி அனுப்பும் போது அல்லது உங்கள் தொடர்புத் தகவல்களைப் பதிவேற்றுதல், ஒத்திசைத்தல் அல்லது இறக்குமதி செய்யும் போதும் உள்ள உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும்.
சாதனத் தகவல்கள்
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, எங்கள் தயாரிப்புகளுடன் ஒருங்கிணைந்திருக்கும் நீங்கள் பயன்படுத்தும் கணினிகள், மொபைல்கள், இணைக்கப்பட்ட டிவிகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்களிலிருந்தும் அவற்றைப் பற்றியும் தகவல்களைச் சேகரிப்போம். அத்துடன், நீங்கள் பயன்படுத்தும் வெவ்வேறு சாதனங்கள் அனைத்திலும் இந்தத் தகவல்களை இணைப்போம். உதாரணமாக, லேப்டாப் அல்லது டேப்லெட் போன்ற பிற சாதனத்தில் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்களுக்கு மிகவும் தொடர்புடைய உள்ளடக்கம் (விளம்பரங்கள் உட்பட) அல்லது அம்சங்களைக் காட்டுவதற்காக அல்லது மொபைல் போன்ற பிற சாதனத்தில் உங்களுக்குக் காட்டப்பட்ட விளம்பரம் தொடர்பாக எந்தச் செயலையாவது மேற்கொண்டீர்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, உங்கள் மொபைலில் எங்கள் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தியது தொடர்பாகச் சேகரித்த தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம்.

இந்தச் சாதனங்களிலிருந்து நாங்கள் பெறும் தகவல்களில் அடங்குவன:

  • சாதனப் பண்புக்கூறுகள்: இயங்குதளம், வன்பொருள் மற்றும் மென்பொருள் பதிப்புகள், பேட்டரி நிலை, சிக்னலின் வலிமை, பயன்படுத்தக்கூடிய சேமிப்பிடம், உலாவி வகை, பயன்பாடு மற்றும் கோப்பின் பெயர்கள் மற்றும் வகைகள், செருகுநிரல்கள் போன்ற தகவல்கள்.
  • சாதனச் செயல்பாடுகள்: சாரளம் முன்புலத்தில் அல்லது பின்புலத்தில் உள்ளதா அல்லது சுட்டி நகர்வுகள் (இவை சாட்பாட்டுகளில் இருந்து மனிதர்களை வேறுபடுத்தும்) போன்ற சாதனத்தில் செய்யப்படும் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றிய தகவல்கள்.
  • அடையாளங்காட்டிகள்: பிரத்யேக அடையாளங்காட்டிகள், சாதன ஐடிகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கேம்கள், பயன்பாடுகள் அல்லது கணக்குகள் போன்ற பிற அடையாளங்காட்டிகள் மற்றும் குடும்பச் சாதன ஐடிகள் (அல்லது அதே சாதனம் அல்லது கணக்கிற்குத் தொடர்புடைய Facebook நிறுவனத் தயாரிப்புகளுக்கு மட்டுமேயான பிற அடையாளங்காட்டிகள்).
  • சாதனச் சிக்னல்கள்: புளூடூத் சிக்னல்கள் மற்றும் அருகிலுள்ள வைஃபை அணுகும் புள்ளிகள், பீக்கான்கள், செல்லுலார் டவர்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள்.
  • சாதன அமைப்புகளின் தரவு: உங்கள் அனுமதியின்படி, GPS இருப்பிடம், கேமரா அல்லது படங்களுக்கான அணுகல் போன்று நீங்கள் இயக்கியுள்ள சாதன அமைப்புகள் மூலமாகப் பெறும் தகவல்கள்.
  • நெட்வொர்க் மற்றும் இணைப்புகள்: மொபைல் ஆபரேட்டர் அல்லது ISP இன் பெயர், மொழி, நேர மண்டலம், மொபைல் எண், IP முகவரி, இணைப்பின் வேகம் போன்ற தகவல்கள் பெறப்படும். சில நேரங்களில், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள அல்லது அதற்கு அருகிலுள்ள பிற சாதனங்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படும். இதன் மூலம், மொபைலிலிருந்து டிவிக்கு வீடியோவை ஸ்ட்ரீம் செய்வது போன்ற விஷயங்களில் எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.
  • குக்கீ தரவு: குக்கீ ஐடிகள், அமைப்புகள் உட்பட உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள குக்கீகளின் தரவு. குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி, Facebook குக்கீகள் கொள்கை மற்றும் Instagram குக்கீகள் கொள்கை ஆகியவற்றில் தெரிந்துகொள்ளவும்.
கூட்டாளர்கள் வழங்கும் தகவல்கள்.
விளம்பரதாரர்கள், பயன்பாட்டு டெவலப்பர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோர், எங்கள் சமூகச் செருகுநிரல்கள் (விரும்பு பொத்தான் போன்றது), Facebook உள்நுழைவு, எங்கள் APIகள் மற்றும் SDKகள் அல்லது Facebook பிக்சல் உட்பட அவர்கள் பயன்படுத்தும் Facebook வணிகக் கருவிகள் மூலம் எங்களுக்குத் தகவல்களை அனுப்பலாம். இந்தக் கூட்டாளர்கள், Facebook கணக்கு உங்களிடம் இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லது Facebook இல் நீங்கள் உள்நுழைந்திருந்தாலும் உள்நுழைந்திராவிட்டாலும், உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்கள், நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள், உங்கள் வாங்குதல்கள், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் மற்றும் அவர்களின் சேவையை நீங்கள் பயன்படுத்தும் விதம் உட்பட Facebook அல்லாத பிற தயாரிப்புகளிலும் சேவைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். எடுத்துக்காட்டாக, எங்கள் API ஐப் பயன்படுத்தி என்ன கேம்களை விளையாடுவீர்கள் என்பதை கேம் டெவலப்பர் எங்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லது ஸ்டோரில் நீங்கள் வாங்கியதைக் குறித்து வணிகம் எங்களுக்குத் தெரிவிக்கலாம். உங்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்கள் மற்றும் உங்களின் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடிய உரிமையைக் கொண்டுள்ள மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடம் இருந்து வாங்குதலை மேற்கொள்ளுதல் போன்ற தகவல்களையும் பெறுவோம்.

கூட்டாளர்களின் சேவைகளைப் பார்க்கும்போதோ பயன்படுத்தும்போதோ அல்லது அவர்களின் மூன்றாம் தரப்பினர்களிடம் இருந்தோ உங்களின் தரவை அவர்கள் பெறுவார்கள். கூட்டாளர்கள் உங்களின் தரவை எங்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அதைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும் பகிர்வதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் சட்டரீதியான உரிமைகள் இருக்க வேண்டும். நாங்கள் எந்த வகையான கூட்டாளர்களிடமிருந்து தரவைப் பெறுகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிக.

Facebook வணிகக் கருவிகளுடன் இணைந்து நாங்கள் எப்படிக் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, Facebook குக்கீகள் கொள்கை மற்றும் Instagram குக்கீகள் கொள்கை ஆகியவற்றைப் படிக்கவும்.

இந்தத் தகவல்களை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

Facebook விதிமுறைகள் மற்றும் Instagram விதிமுறைகள் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள Facebook தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காகவும் அவற்றுக்கான ஆதரவை அளிப்பதற்காகவும், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி எங்களிடம் உள்ள தகவல்களைப் (உங்கள் விருப்பங்களுக்கு உட்பட்டது) பயன்படுத்துவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
எங்கள் தயாரிப்புகளை வழங்குதல், தனிப்பயனாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
உங்களுக்குத் தொடர்புடைய அம்சங்களையும் உள்ளடக்கத்தையும் (உங்கள் செய்தி வழங்கல், Instagram வழங்கல், Instagram Stories மற்றும் விளம்பரங்கள் அடங்கும்) காட்டுவது மற்றும் எங்கள் தயாரிப்புகளிலும் பிற தயாரிப்புகளிலும் உங்களுக்கு ஏற்ற பரிந்துரைகளை (நீங்கள் ஆர்வங்காட்டக்கூடிய குழுக்கள் அல்லது நிகழ்வுகள் அல்லது நீங்கள் பின்தொடர விரும்பக்கூடிய தலைப்புகள்) வழங்குவது உட்பட எங்கள் தயாரிப்புகளை வழங்குவதற்காக, எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். பிரத்யேகமான மற்றும் உங்களுக்குத் தொடர்புடைய தனிப்பயனாக்கிய தயாரிப்புகளை உருவாக்க, உங்கள் இணைப்புகள், விருப்பத்தேர்வுகள், ஆர்வங்கள் மற்றும் உங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நாங்கள் சேகரிக்கும் மற்றும் தெரிந்துகொள்ளும் தரவின் (வெளிப்படையாக ஒப்புதலைத் தெரிவித்து நீங்கள் வழங்கும் சிறப்புப் பாதுகாப்புகளைக் கொண்ட தரவு அடங்கும்) அடிப்படையிலான செயல்பாடுகள், எங்கள் தயாரிப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அவற்றுடன் எப்படி ஊடாடுகிறீர்கள் என்பதைப் பற்றிய தகவல்கள் மற்றும் எங்கள் தயாரிப்புகளிலும் பிற தயாரிப்புகளிலும் நீங்கள் ஆர்வங்காட்டும் மற்றும் தொடர்புகொள்ளும் மக்கள், இடங்கள் அல்லது விஷயங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம். அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் பரிந்துரைகள் உட்பட Facebook தயாரிப்புகளில், Facebook மற்றும் Instagram அனுபவத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் காட்டுவதற்கு, உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து மேலும் அறியவும்; நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை எவ்வாறு தேர்வுசெய்கிறோம் என்பதையும் குறித்து மேலும் அறியலாம்.
  • Facebook தயாரிப்புகள் மற்றும் சாதனங்கள் அனைத்திலும் உள்ள தகவல்கள்: நீங்கள் எங்கிருந்து பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் பயன்படுத்தும் எல்லா Facebook தயாரிப்புகளிலும் மிகப் பொருத்தமான மற்றும் எந்தவித மாறுபாடும் இல்லாத உள்ளடக்கத்தை வழங்க, உங்கள் செயல்பாடுகள் குறித்த தகவல்களை வெவ்வேறு Facebook தயாரிப்புகளிலும் சாதனங்களிலும் இணைப்போம். உதாரணமாக, Instagram இல் நீங்கள் பின்தொடர்பவர் அல்லது Messenger இல் நீங்கள் தொடர்புகொள்பவர் இருக்கும் Facebook குழுவில் சேரும்படி உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். உங்கள் அனுபவத்தை இன்னும் தடையற்றதாகவும் அமைக்கிறோம், உதாரணமாக, ஒரு Facebook தயாரிப்பில் நீங்கள் கணக்கைப் பதிவுசெய்யும் போது வழங்கிய உங்கள் பதிவுத் தகவல்கள் (உங்கள் மொபைல் எண் போன்றது) வேறு தயாரிப்பில் தானாகவே நிரப்பப்படும்.
  • இருப்பிடம் சார்ந்த தகவல்கள்: உங்களுக்கும் பிறருக்கும் விளம்பரங்கள் உட்பட எங்கள் தயாரிப்புகளை வழங்க, தனிப்பயனாக்க மற்றும் மேம்படுத்த, உங்களின் நடப்பு இருப்பிடம், நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள், உங்களுக்கு அருகிலுள்ள வணிகங்கள், மக்கள் போன்ற இருப்பிடம் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துவோம். இருப்பிடம் சார்ந்த தகவல்கள், துல்லியமான சாதன இருப்பிடம் (சேகரிக்க நீங்கள் அனுமதி வழங்கியிருந்தால்), IP முகவரிகள் மற்றும் நீங்களும் பிறரும் Facebook தயாரிப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் (செக் இன்கள் அல்லது நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் போன்றவை) போன்ற விஷயங்களின் அடிப்படையில் அமையும்.
  • தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை நடத்துவது மற்றும் புதிய தயாரிப்புகளையும் அம்சங்களையும் சோதித்து, சிக்கலைச் சரிசெய்வது உட்பட எங்கள் தயாரிப்புகளை உருவாக்க, சோதிக்க மற்றும் மேம்படுத்த, எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துவோம்.
  • முகமறிதல்: இதை நீங்கள் இயக்கியிருந்தால், படங்கள், வீடியோக்கள் மற்றும் கேமரா ஆகியவற்றில் உங்களை அடையாளங்காண, முகமறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம். நாங்கள் உருவாக்கும் முகமறிதல் டெம்ப்ளேட்கள், ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் கீழ் சிறப்புப் பாதுகாப்புகளைக் கொண்ட தரவாகும். Facebook அமைப்புகளுக்குச் சென்று.முகமறிதல் தொழில்நுட்பத்தை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் அல்லது இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான எங்கள் உபயோகத்தை எப்படிக் கட்டுப்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும். முகமறிதல் தொழில்நுட்பத்தை Instagram இல் நாங்கள் அறிமுகப்படுத்தினால், முதலில் உங்களுக்குத் தெரிவிப்போம். அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
  • விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்த பிற உள்ளடக்கம்: உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்கள், ஆஃபர்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிற உள்ளடக்கங்களை உங்களுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து காட்ட, உங்கள் ஆர்வங்கள், நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் உள்ளிட்ட உங்களின் தகவல்களைப் பயன்படுத்துவோம். உங்களுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து காட்டுகிறோம் என்பதையும் உங்களுக்கான விளம்பரங்களையும் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிற உள்ளடக்கங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் விருப்பங்கள் மீதான தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதையும் பற்றி, Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகள் மேலும் அறிந்துகொள்ளவும்.
அளவீடு, பகுப்பாய்வுகள் மற்றும் பிற வணிகச் சேவைகளை வழங்குதல்.
விளம்பரதாரர்கள் மற்றும் பிற கூட்டாளர்கள் தங்களின் விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறன் மற்றும் விநியோகத்தை அளவிட மற்றும் தங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களையும், தங்களின் இணையதளங்கள், பயன்பாடுகள் மற்றும் சேவைகளுடன் மக்கள் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் வகையில், உங்களின் தகவல்களைப் (நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்ற எங்களின் தயாரிப்புகளில் உங்கள் செயல்பாடு போன்றவை) பயன்படுத்துவோம். இந்தக் கூட்டாளர்களுடன் நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்கிறோம் என்பதைப் பற்றி மேலும் அறியவும்.
பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பை ஊக்குவித்தல்.
கணக்கு மற்றும் செயல்பாட்டைச் சரிபார்க்க, தீங்கு விளைவிக்கும் நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ஸ்பேம் மற்றும் பிற மோசமான அனுபவங்களைக் கண்டறிந்து தடுக்க, எங்கள் தயாரிப்புகளின் நன்மதிப்பைப் பாரமரிக்க மற்றும் Facebook மற்றும் பிற தயாரிப்புகளில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்க, உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்குரிய செயல்பாடு அல்லது எங்களின் விதிமுறைகள் அல்லது கொள்கைகள் மீறல்களை ஆய்வு செய்யவோ அல்லது உதவித் தேவைப்படுபவரைக் கண்டறியவோ, உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம். மேலும் அறிய, Facebook பாதுகாப்பு உதவி மையம் மற்றும் Instagram பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.
உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மார்க்கெட்டிங் தகவல்களை அனுப்ப, எங்கள் தயாரிப்புகள் தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ள மற்றும் எங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம். எங்களைத் தொடர்புகொள்ளும் போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
சமூக நன்மைக்கான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு.
ஆராய்ச்சியை நடத்தவும் ஆதரிக்கவும் மற்றும் சமூக நலம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான விருப்பம், உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொதுவான தலைப்புகளைக் கண்டறிய, உங்கள் தகவல்களைப் (நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் ஆராய்ச்சி கூட்டாளர்கள் வழங்கும் தகவல்கள் உட்பட) பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, பேரிடரின் போது நிவாரணப் பணிகளுக்கு உதவ, இடப்பெயர்ப்பு மாதிரிகளைப் பற்றிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்வோம். ஆராய்ச்சித் திட்டங்களைப் பற்றி மேலும் அறியவும்.

இந்தத் தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன?

பின்வரும் முறைகளில், உங்கள் தகவல்கள் பிறருடன் பகிரப்படுகின்றன:

Facebook தயாரிப்புகளில் பகிர்தல்
நீங்கள் பகிர்ந்துகொள்ளும் மற்றும் தொடர்புகொள்ளும் நபர்கள் மற்றும் கணக்குகள்
எங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் பகிரும் மற்றும் தொடர்புகொள்ளும் போது, நீங்கள் பகிர்வதைப் பார்க்க வேண்டிய பார்வையாளர்களைத் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் இடுகையிடும் போது, குழு, அனைத்து நண்பர்கள், பொதுவானது அல்லது பயனர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்டவர் பட்டியல் போன்று உங்கள் இடுகைக்கான பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போன்று, மக்கள் அல்லது வணிகங்களுடன் தொடர்புகொள்வதற்கு Messenger அல்லது Instagram ஐ நீங்கள் பயன்படுத்தும்போது, நீங்கள் அனுப்பும் உள்ளக்கத்தை அந்த நபர்களும் வணிகங்களும் பார்க்கலாம். விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்துடன் ஈடுபடுதல் போன்று எங்கள் தயாரிப்புகளில் நீங்கள் செய்த செயல்பாடுகளை உங்கள் நெட்வொர்க்கும் பார்க்கலாம். பிற கணக்குகள் தங்களின் Facebook மற்றும் Instagram Stories போன்றவற்றைப் பார்த்துள்ளவர்கள் யார் என்பதைப் பார்க்கவும் உதவுகிறோம்.

கணக்கு இல்லை என்றாலும் கூட, எங்களின் அல்லது பிற தயாரிப்புகளில், அனைவரும் பொதுத் தகவல்களைப் பார்க்க முடியும். உங்கள் Instagram பயனர்பெயர்; பொதுப் பார்வையாளர்களுடன் நீங்கள் பகிரும் தகவல்கள்; Facebook இன் பொதுச் சுயவிவரத்தில் உள்ள தகவல்கள்; Facebook பக்கம், பொது Instagram கணக்கு அல்லது Facebook Marketplace போன்ற பிற பொது மன்றத்தில் நீங்கள் பகிரும் உள்ளடக்கம் போன்றவை இதில் அடங்கும். பிற Facebook நிறுவனத் தயாரிப்புகள், தேடல் முடிவுகள் அல்லது கருவிகள் மற்றும் APIகள் மூலமாக எங்களின் அல்லது பிற தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொதுத் தகவல்களின் அணுகலை நீங்களும் Facebook மற்றும் Instagram ஐப் பயன்படுத்துபவர்களும் நாங்களும் வழங்கலாம் அல்லது அனுப்பலாம். தேடல் பொறிகள், APIகள் மற்றும் டிவி போன்ற ஆஃப்லைன் மீடியா மூன்றாம் தரப்புச் சேவைகள் மற்றும் எங்களின் தயாரிப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் பொதுத் தகவல்கள் பார்க்கப்படும், அணுகப்படும், மீண்டும் பகிரப்படும் அல்லது பதிவிறக்கப்படும்.

என்ன தகவல்கள் பொதுவாக உள்ளன மற்றும் உங்கள் தெரிவுநிலையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி Facebook மற்றும் Instagram இல் மேலும் அறிந்துகொள்ளவும்.
பிறர் உங்களைப் பற்றி பகிரும் அல்லது மீண்டும் பகிரும் உள்ளடக்கம்
நீங்கள் யாருடன் பகிர வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஏனெனில், நீங்கள் பகிரும் பார்வையாளர்கள் அல்லாதவர்கள் மற்றும் வணிகங்கள் உட்பட, எங்கள் தயாரிப்புகளில் உங்கள் செயல்பாட்டைப் பார்ப்பவர்கள் எங்களுடைய அல்லது பிற தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுடன் அதைப் பகிரலாம். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட நண்பர்கள் அல்லது கணக்குகளில் இடுகையைப் பகிரும்போதோ அல்லது அனுப்பும்போதோ, எங்களின் அல்லது பிற தயாரிப்புகள் அனைத்திலும் நேரடியாக அல்லது Facebook Spaces போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சங்களில் அவர்கள் அதைப் பதிவிறக்கலாம், ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் அல்லது மீண்டும் பகிரலாம். மேலும், வேறு ஒருவரின் இடுகையில் நீங்கள் கருத்துத் தெரிவிக்கும்போதோ அல்லது அவரின் உள்ளடக்கத்தில் உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதோ, பிறரின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனைவரும் உங்கள் கருத்து அல்லது உணர்ச்சியைப் பார்க்கலாம். அந்த நபர் பார்வையாளர்களைப் பின்னர் மாற்றி அமைக்கலாம்.

பிறர் தேர்ந்தெடுத்துள்ள பார்வையாளர்களுடன் உங்களைப் பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்க மற்றும் பகிர, பிறர் எங்களின் தயாரிப்புகளையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கதையில் பிறர் உங்களின் படத்தைப் பகிரலாம், இடுகையின் இருப்பிடத்தில் உங்களைக் குறிக்கலாம் அல்லது குறியிடலாம் அல்லது அவர்களின் இடுகைகள் அல்லது செய்திகளில் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம். எங்களின் தயாரிப்புகளில் உங்களைப் பற்றி பிறர் பகிர்ந்ததில் உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், உள்ளடக்கத்தை எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எங்கள் தயாரிப்புகளில் உங்கள் செயலின் நிலை அல்லது இருப்பைப் பற்றிய தகவல்கள்.
Instagram, Messenger அல்லது Facebook போன்றவற்றில் தற்போது நீங்கள் செயல்பாட்டில் இருத்தல் அல்லது கடைசியாக எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தியது உட்பட, எங்கள் தயாரிப்புகளில் நீங்கள் செயலில் இருக்கிறீர்களா என்பதைத் தெரிவிக்கும் சிக்னல்களை உங்கள் நெட்வொர்க்கில் உள்ளவர்கள் பார்க்கலாம்.
எங்கள் சேவைகளில் பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துதல்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் அல்லது அவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள், இணையதளங்கள் அல்லது பிற சேவைகளை நீங்கள் பயன்படுத்த தேர்வுசெய்யும்போது, அவை நீங்கள் இடுகையிடுவது அல்லது பகிர்வதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் Facebook நண்பர்களுடன் கேம் விளையாடும் போது அல்லது ஓர் இணையதளத்தில் Facebook இன் கருத்து அல்லது பகிர் பொத்தானைப் பயன்படுத்தும் போது, கேம் டெவலப்பர் அல்லது இணையதளம் கேமில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களைப் பெறக்கூடும் அல்லது அவர்களின் இணையதளத்தில் இருந்து Facebook இல் பகிர்ந்துகொண்ட கருத்து அல்லது இணைப்பைப் பெறக்கூடும். மேலும், மூன்றாம் தரப்புச் சேவைகளை நீங்கள் பதிவிறக்கும்போதோ அல்லது பயன்படுத்தும்போதோ, Facebook இல் உங்கள் பொதுச் சுயவிவரம் மற்றும் அவர்களுடன் நீங்கள் பகிரும் தகவல்கள் போன்றவற்றை அவர்கள் அணுகலாம். நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளும் இணையதளங்களும் அவற்றுடன் பகிர்வதற்குத் தேர்வுசெய்திருந்தால் உங்கள் Facebook நண்பர்கள் பட்டியலைப் பெறக்கூடும். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்கள், உங்கள் Facebook நண்பர்கள் பற்றிய பிற தகவல்களையோ அல்லது Instagram இல் உங்களைப் பின்தொடர்பவர்கள் குறித்த தகவல்களையோ உங்களிடமிருந்து பெற முடியாமல் போகலாம் (உங்களின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் தங்களுக்குள்ளே இந்தத் தகவல்களைப் பகிர்வதற்குத் தேர்வுசெய்யலாம்). இந்த மூன்றாம் தரப்புச் சேவைகள் சேகரிக்கும் தகவல்கள், அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டது, இதற்கு அல்ல.

Facebook மற்றும் Instagram இன் ஒத்த தளப் பதிப்புகளை வழங்கும் சாதனங்கள் மற்றும் இயங்குதளங்கள் (அதாவது, எங்கள் சுய முதல் தரப்புப் பயன்பாடுகளை உருவாக்கவில்லை), உங்களுடன் நண்பர்கள் பகிரும் தகவல்கள் உட்பட, அவர்களுடன் நீங்கள் பகிரும் அனைத்துத் தகவல்களையும் அணுகும். அதனால், எங்களின் முக்கியச் செயல்திறனை உங்களுக்கு வழங்க முடியும்.

குறிப்பு: மோசடியைத் தடுப்பதற்கு உதவ, டெவலப்பர்களின் தரவு அணுகலை மேலும் கட்டுப்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, 3 மாதங்களுக்கு அவர்களின் பயன்பாட்டைப் பயன்படுத்தவில்லை எனில், உங்கள் Facebook மற்றும் Instagram தரவிற்கான டெவலப்பர்களின் அணுகலை அகற்றுவோம், மேலும் உள்நுழைவை மாற்றுகிறோம். இதன் மூலம், அடுத்த பதிப்பில் பெயர், Instagram பயனர்பெயர் மற்றும் சுயக்குறிப்பு, சுயவிவரப் படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை மட்டும் சேர்க்கும் வகையில், பயன்பாட்டு மதிப்பாய்வு இல்லாமல் பயன்பாடு கோரும் தரவைக் குறைப்போம். வேறு எந்தத் தகவலையும் கோருவதற்கு, எங்களின் அனுமதி வேண்டும்.
புதிய உரிமையாளர்.
எங்கள் சேவைகள் அல்லது அவற்றின் சொத்துகளின் உரிமை அல்லது கட்டுப்பாடு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றப்பட்டால், உங்கள் தகவல்கள் புதிய உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படலாம்.

மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பகிர்தல்.
எங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் அல்லது Facebook வணிகக் கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் வணிகங்களை மேம்படுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பணியாற்றுவதன் மூலம், எங்கள் நிறுவனத்தை இயக்குவதும் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு இலவசமாகச் சேவைகளை வழங்குவதும் சாத்தியமாகிறது. இல்லை. உங்களின் எந்தத் தகவலையும் நாங்கள் யாருக்கும் எப்போதும் விற்கமாட்டோம். நாங்கள் வழங்கும் தகவல்களை எங்களின் கூட்டாளர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் வெளிப்படுத்தலாம் என்பது குறித்து உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இங்கு உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் தரப்பினரின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது:
எங்களின் பகுப்பாய்வுகள் சேவைகளைப் பயன்படுத்தும் கூட்டாளர்கள்.
Facebook மற்றும் பிற தயாரிப்புகளில் தங்களின் இடுகைகள், பட்டியல்கள், பக்கங்கள், வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களுடன் பிறர் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதைப் பிறரும் வணிகங்களும் புரிந்துகொள்வதற்கு உதவ, ஒருங்கிணைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை வழங்குவோம். எடுத்துக்காட்டாக, பக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் Instagram வணிகச் சுயவிவரங்கள் தங்களின் இடுகைகளைப் பார்த்த, அதில் உணர்ச்சியை வெளிப்படுத்திய அல்லது கருத்துத் தெரிவித்த நபர்கள் அல்லது கணக்குகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் பெறுவார்கள். மேலும், தங்களின் பக்கம் அல்லது கணக்குடனான உரையாடல்களைப் புரிந்துகொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட டெமோகிராஃபிக்கையும் பிற தகவல்களையும் பெறுவார்கள்.
விளம்பரதாரர்கள்.
அவர்களின் விளம்பரங்களை யார் பார்க்கிறார்கள் மற்றும் எவ்வாறு அவர்களின் விளம்பரங்கள் செயல்படுகின்றன என்பது போன்ற அறிக்கைகளை விளம்பரதாரர்களுக்கு வழங்குவோம். இருப்பினும், உங்கள் அனுமதி இல்லாமல், உங்களை அடையாளங்காணும் வகையிலான தனிப்பட்ட தகவல்களைப் (உங்களைத் தொடர்புகொள்ள அல்லது அடையாளங்காணும் வகையிலான உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள்) பகிரமாட்டோம். எடுத்துக்காட்டாக, தங்கள் பார்வையாளர்களை மேலும் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில், பொதுவான டெமோகிராஃபிக் மற்றும் விருப்பம் தொடர்பான தகவலை (எடுத்துக்காட்டாக, 25 முதல் 34 வயதுக்கு இடையே உள்ள மேட்ரிட்டில் வசிக்கும் மற்றும் மென்பொருள் பொறியியலை விரும்பும் பெண் விளம்பரத்தைப் பார்த்தார்) விளம்பரதாரர்களுக்கு வழங்குவோம். எந்த Facebook விளம்பரங்கள் உங்களை வாங்கச் செய்தது அல்லது விளம்பரதாரருடன் செயலை மேற்கொள்ளச் செய்தது என்பதையும் உறுதிப்படுத்துவோம்.
அளவீட்டுக் கூட்டாளர்கள்.
உங்களைப் பற்றிய தகவலை மொத்தமாக ஒழுங்கமைத்து, எங்கள் கூட்டாளர்களுக்குப் பகுப்பாய்வுகள் மற்றும் அளவீட்டு அறிக்கைகளை வழங்கும் நிறுவனங்களுடன் உங்களைப் பற்றிய தகவலைப் பகிர்வோம்.
எங்கள் தயாரிப்புகளில் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் கூட்டாளர்கள்.
பிரீமியம் உள்ளடக்கத்தைப் பெறுவதற்குக் குழு சேரும்போது அல்லது எங்கள் தயாரிப்புகளில் விற்பனையாளரிடமிருந்து எதையாவது வாங்கினால், ஷிப்பிங் மற்றும் தொடர்பு விவரங்கள் உட்பட, பரிவர்த்தனையை முடிப்பதற்குத் தேவைப்படும் தகவலுடன் உங்கள் பொதுவான தகவல் மற்றும் அவர்களுடன் நீங்கள் பகிரும் பிற தகவலை, உள்ளடக்கத்தை உருவாக்கியவர் அல்லது விற்பனையாளர் பெறலாம்.
விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்.
தொழில்நுட்ப உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல், எங்கள் சேவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்தல், வாடிக்கையாளர் சேவையை வழங்குதல், பணம் செலுத்தும் வசதியை அளித்தல் அல்லது கருத்துக்கணிப்புகளை நடத்துதல் போன்று எங்கள் வணிகத்திற்கு ஆதரவளிக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்குத் தகவல்களையும் உள்ளடக்கத்தையும் பகிர்வோம்.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள்.
எங்கள் வணிகம் அல்லது நோக்கத்தை ஆதரிக்கும் உயர்நிலைக் கற்றல் மற்றும் புதுமையை முன்னேற்றும் மற்றும் பொதுவான சமூக நலன், தொழில்நுட்ப மேம்பாடு, பொது நலன், உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆகிய தலைப்புகளில் கண்டுபிடிப்பு மற்றும் புதுமையை மேம்படுத்தும் ஆராய்ச்சி செய்வதற்கு, ஆராய்ச்சி கூட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்குத் தகவல்களையும் உள்ளடக்கத்தையும் வழங்குவோம்.
சட்ட அமலாக்கம் அல்லது சட்டப்பூர்வமான கோரிக்கைகள்.
சட்ட அமலாக்கத் துறையுடன் தகவல்களைப் பகிர்வோம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழல்களில் சட்டப்பூர்வமான கோரிக்கைகளுக்குப் பதிலாகத் தகவல்களைப் பகிர்வோம்.
மூன்றாம் தரப்புக் கூட்டாளர்களுடன் நீங்கள் அல்லது பிறர் பகிரும் உங்களைப் பற்றிய தகவல்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைக் குறித்து Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகளில் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

Facebook நிறுவனங்கள் எப்படி ஒன்றாக வேலை செய்கின்றன?

நீங்கள் பயன்படுத்தும் Facebook நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் புதுமையான, தொடர்புடைய, சீரான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கு, பிற Facebook நிறுவனங்களுக்கு (WhatsApp மற்றும் Oculus உட்பட) உட்கட்டமைப்பு, சிஸ்டம்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை Facebook மற்றும் Instagram பகிர்கின்றன. இந்த நோக்கங்களுக்காக, பொருந்தும் சட்டம் அனுமதிக்கும்படி, அவற்றின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு Facebook நிறுவனங்கள் அனைத்திலும் உங்களைப் பற்றிய தகவல்களையும் செயலாக்குவோம். எடுத்துக்காட்டாக, WhatsApp சேவையில் ஸ்பேமை அனுப்பும் கணக்குகள் பற்றிய தகவல்களை அதிலிருந்து செயலாக்குவோம், இதன் மூலம் Facebook, Instagram அல்லது Messenger இல் உள்ள அந்தக் கணக்குகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கலாம். வெவ்வேறு Facebook நிறுவனத் தயாரிப்புகளில் உள்ள தனிப் பயனர்களின் எண்ணிக்கையைப் புரிந்துகொள்வது போன்று, Facebook நிறுவனத் தயாரிப்புகளை மக்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் மற்றும் அவற்றுடன் எப்படி ஊடாடுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் நாங்கள் பணிபுரிகிறோம்.

தரவைச் செயலாக்குவதற்கான எங்கள் சட்டப்பூர்வமான அடிப்படைகள் என்ன?

மேலே விவரிக்கப்பட்டுள்ள வழிகளில் எங்களிடம் உள்ள தரவைச் சேகரிப்போம், பயன்படுத்துவோம் மற்றும் பகிர்வோம்:

  • எங்கள் Facebook சேவை விதிமுறைகள் அல்லது Instagram பயன்பாட்டு விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில்;
  • Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகள் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யக்கூடிய, உங்கள் ஒப்புதலுக்கு இணங்கும் வகையில்;
  • எங்கள் சட்டப்பூர்வமான கடமைகளுடன் இணங்கும் வகையில்;
  • உங்களுடைய அல்லது பிறரின் முக்கியமான ஆர்வங்களைப் பாதுகாப்பதற்கு;
  • பொது நலனுக்கு ஏற்ற வகையில்; மற்றும்
  • உங்கள் ஆர்வங்கள் அல்லது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பைக் கோரும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் கட்டுப்படுத்தாத வரை, எங்கள் பயனர்கள் மற்றும் கூட்டாளர்களுக்குப் புதுமையான, தனிப்படுத்திய, பாதுகாப்பான மற்றும் லாபம் தரக்கூடிய சேவையை வழங்குவதற்கான எங்கள் ஆர்வங்கள் உட்பட எங்கள் (அல்லது பிறரின்) சட்டப்படியான ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில்.

இந்தச் சட்ட அடிப்படைகளைக் குறித்தும், நாங்கள் தரவைச் செயலாக்கம் செய்யும் வழிகளில் அவை எவ்வாறு தொடர்புடையவை என்பது குறித்தும் மேலும் அறிக.

GDPR கீழ் வழங்கப்பட்டுள்ள உங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?

பொதுவான தரவுப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ், உங்கள் தரவை அணுகுவது, திருத்துவது, அனுப்புவது மற்றும் அழிப்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. இந்த உரிமைகளைக் குறித்தும் உங்கள் உரிமைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும், Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகளில் மேலும் தெரிந்துகொள்ளவும். உங்களுக்கு எதிர்க்கும் உரிமையும் உங்கள் தரவின் சில செயலாக்கத்தை வரையறுக்கும் உரிமையும் உண்டு. இதில் அடங்குபவை:

  • நேரடிச் சந்தைப்படுத்தலுக்காக உங்கள் தரவை நாங்கள் செயலாக்குவதை எதிப்பதற்கான உங்கள் உரிமையை, அத்தகைய சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளில் உள்ள "குழுவிலகு" இணைப்பைப் பயன்படுத்துவது; மற்றும்
  • பொது நலனுக்காக ஒரு பணியை நாங்கள் மேற்கொள்ளவோ அல்லது எங்களுடைய அல்லது மூன்றாம் தரப்பினரின் சட்டப்படியான ஆர்வங்களைத் தொடர்ந்து செய்வதற்காகவோ உங்கள் தரவை நாங்கள் செயலாக்குவதை எதிர்ப்பதற்கான உரிமை. இந்த உரிமையை நீங்கள் Facebook மற்றும் Instagram இல் பயன்படுத்தலாம்.

தரவைத் தக்கவைத்தல், கணக்கை முடக்குதல் மற்றும் நீக்குதல்

எங்கள் சேவைகள் மற்றும் Facebook தயாரிப்புகளை வழங்கும் வரை அல்லது உங்கள் கணக்கு நீக்கப்படும் வரை (இரண்டில் எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில்), நாங்கள் தரவைச் சேமித்து வைப்போம். தரவின் தன்மை, அது சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்படுவதற்கான நோக்கம், தொடர்புடைய சட்டப்பூர்வ அல்லது செயல்பாட்டுத் தேவைகளின்படி தக்கவைத்தல் போன்றவற்றைச் சார்ந்து இது ஒவ்வொரு சூழலில் தனித்தனியே தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் எதையாவது தேடும்போது, எப்போது வேண்டுமானாலும் அந்த வினவலை உங்கள் தேடல் வரலாற்றிலிருந்து அணுகலாம், நீக்கலாம் ஆனால், அந்தத் தேடலின் பதிவானது 6 மாதங்களுக்குப் பின்னரே நீக்கப்படும். கணக்குச் சரிப்பார்ப்பு நோக்கங்களுக்காக, அரசு வழங்கிய ஐடியின் நகலைச் சமர்ப்பித்தீர்கள் எனில், அதைச் சமர்ப்பித்ததிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு அந்த நகலை நீக்குவோம். நீங்கள் பகிர்ந்த உள்ளடக்கம் மற்றும் சமூக செருகுநிரல்களின் மூலம் பெற்ற குக்கீத் தரவை நீக்குவது பற்றி மேலும் அறிக.

உங்கள் கணக்கை நீங்கள் நீக்கும் போது, உங்கள் படங்கள் மற்றும் நிலைப் புதுப்பிப்புகள் போன்ற நீங்கள் இடுகையிட்ட தகவல்களை நீக்குவோம். அந்தத் தகவல்களைப் பின்னர் மீட்டெடுக்க முடியாது. உங்களைப் பற்றி பிறர் பகிர்ந்த தகவல்களானது உங்கள் கணக்குடன் தொடர்புடையது அல்ல, மேலும் அவை நீக்கப்படாது. உங்கள் கணக்கை நீக்க விரும்பாமல் தற்காலிகமாகத் தயாரிப்பைப் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பினால், நீக்குவதற்குப் பதிலாக உங்கள் கணக்கை முடக்கி வைக்கலாம். எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீக்க, Facebook அமைப்புகள் மற்றும் Instagram அமைப்புகளுக்குச் செல்லவும்.

சட்டக் கோரிக்கைகளுக்கு நாங்கள் எப்படிப் பதிலளிக்கிறோம் அல்லது தீங்கைத் தடுக்கிறோம்?

ஒழுங்குபடுத்துபவர்கள், சட்ட அமலாக்கத் துறை அல்லது மற்றவை மூலம், உங்கள் தகவலை அணுகுவோம், பாதுகாப்பாக வைத்திருப்போம் மற்றும் பகிர்வோம்:
  • சட்டத்தால் கேட்கப்படுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்தால், சட்டக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போது அவற்றைச் செய்யலாம். அதன் அதிகார வரம்பிற்குள் சட்டத்தால் கேட்கப்படுவதில் நியாயம் இருக்கும் போது, பயனர்கள் அந்த அதிகார வரம்பிற்குள் வரும் போது, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இருக்கும் போது, அந்தச் சட்டக் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்கலாம்.
  • நியாயம் இருக்கும் போது, பின்வருவனவற்றைச் செய்வது அவசியம்: மோசடி, தயாரிப்புகளை அங்கீகாரமின்றி பயன்படுத்துதல், எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறுதல் அல்லது பிற பாதிக்கக்கூடிய அல்லது சட்டவிரோதச் செயலைக் கண்டறிவது, தடுப்பது மற்றும் குறிப்பிடுவது; விசாரணைகள் அல்லது ஒழுங்குபடுத்தும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இருப்பது உட்பட, எங்களை (எங்கள் உரிமைகள், சொத்து அல்லது தயாரிப்புகள் உள்ளிட்டவை), உங்களையோ அல்லது பிறரையோ பாதுகாப்பது; அல்லது இறப்பு அல்லது உடனடி உடற்காயத்தைத் தடுப்பது. எடுத்துக்காட்டாக, தொடர்புடையதாக இருந்தால், தயாரிப்புகளில் அல்லது தயாரிப்புகளுக்கு வெளியே நடக்கும் மோசடி, முறைகேடு மற்றும் பிற பாதிக்கக்கூடிய செயலைத் தடுப்பதற்கு, உங்கள் கணக்கின் நம்பகத்தன்மை பற்றிய தகவலை, மூன்றாம் தரப்புக் கூட்டாளர்களுடன் பரிமாறுவோம்.

உங்களைப் பற்றிய தகவல்களை (Facebook உடன் நீங்கள் மேற்கொண்ட வாங்குதல்கள் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைத் தரவு உட்பட), சட்டக் கோரிக்கை அல்லது பொறுப்பு, அரசு விசாரணை அல்லது எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளில் நிகழ்ந்த சாத்தியமான மீறல்கள் தொடர்புடைய விசாரணைகள் அல்லது தீங்கினைத் தவிர்ப்பதற்காக அணுகலாம், குறிப்பிட்ட காலம் வரை தக்கவைக்கலாம். விதிமுறைகளை மீறியதாக முடக்கிய கணக்குகளில் உள்ள தகவல்களை, மீண்டும் முறைகேடு செய்யாமல் தடுக்க அல்லது பிற விதிமுறை மீறல்களைத் தடுப்பதற்காக, குறைந்தது ஒரு வருடத்திற்குத் தக்கவைத்திருப்போம்.

எங்கள் உலகளாவிய சேவைகளின் பகுதியாக தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் மற்றும் பகிர்கிறோம்?

இந்தக் கொள்கையின் அடிப்படையில், உலகளாவிய அளவில் Facebook நிறுவனங்களுக்கு உள்ளும் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் வெளியிலும் மற்றும் உலகம் முழுவதும் நீங்கள் இணைந்த மற்றும் பகிர்ந்தவர்களுடன் தகவல்களைப் பகிர்வோம். Facebook அயர்லாந்தால் கட்டுப்படுத்தப்படும் தகவல்கள், இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, அமெரிக்கா அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே பிற நாடுகளுக்கு பரிமாற்றப்படும் அல்லது மாற்றப்படும் அல்லது சேமிக்கப்பட்டு, செயலாக்கப்படுத்தப்படும். Facebook விதிமுறைகள் மற்றும் Instagram விதிமுறைகளில் அமைக்கப்பட்ட சேவைகளை வழங்க மற்றும் உலகளவில் எங்கள் தயாரிப்புகளை இயக்கவும் உங்களுக்கு வழங்கவும், இந்தத் தரவு பரிமாற்றங்கள் அவசியம். ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கான தரவுப் பரிமாற்றங்களுக்குப் பொருந்தும்பட்சத்தில் ஐரோப்பிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான ஒப்பந்தச் சட்டக் கூறுகளைப் பயன்படுத்துவோம் மற்றும் குறிப்பிட்ட நாடுகளைப் பற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் நிறைவான முடிவுகளைச் சார்ந்திருப்போம்.

இந்தக் கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களைப் பற்றி எவ்வாறு உங்களுக்குத் தெரிவிப்போம்?

இந்தக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் முன் உங்களுக்குத் தெரிவிப்பதுடன், எங்கள் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் முன் மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் உங்களுக்கு வாய்ப்பளிப்போம்.

சந்தேகங்கள் இருந்தால் Facebook ஐ எப்படித் தொடர்புகொள்வது

தனியுரிமை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து Facebook மற்றும் Instagram இல் மேலும் அறியலாம். இந்தக் கொள்கையைக் குறித்துக் கேள்விகள் இருந்தால், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி எங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்களின் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய, எங்களுடன் உங்களுக்கு இருக்கும் சர்ச்சைகளை TrustArc வழியாக நாங்கள் சரிசெய்யலாம். TrustArc இன் இணையதளம் மூலம் தொடர்புகொள்ளலாம்.
எங்களைத் தொடர்புகொள்ளவும்
உங்கள் தகவல்களுக்கான தரவுக் கட்டுப்பாட்டாளர் Facebook Ireland ஆகும், அதனை நீங்கள்ஆன்லைனில் தொடர்புகொள்ளலாம், அல்லது மின்னஞ்சல் அனுப்பவும்:
Facebook Ireland Ltd.
4 Grand Canal Square
Grand Canal Harbour
Dublin 2 Ireland

Facebook Ireland Ltd இன் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்ளவும்

Facebook Ireland இன் முதன்மை மேற்பார்வை அதிகாரி, அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையர் அல்லது உங்கள் உள்ளூர் மேற்பார்வை அதிகாரி ஆகியோரிடம் புகாரைப் பதிவுசெய்வதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.


கடைசியாகத் திருத்திய தேதி: ஏப்ரல் 19, 2018