கொறிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொறிப்பிகள்
புதைப்படிவ காலம்:பிந்தைய தொல்லுயிரிகாலம் முதல் புத்துயிரிக் கால அண்மை வரை(56-0)
Rodent collage.jpg
வலஞ்சுழிமுறையில் இடது மேல்புறம்: காபிபரா, வேனில்மான், பொன்வரித் தரை அணில், வீட்டெலி, வட அமெரிக்க நீரெலி ஆகியன, முறையே Hystricomorpha, Anomaluromorpha, Sciuromorpha, Myomorpha, and Castorimorpha ஆகிய உள்வரிசைகளைக் குறிக்கின்றன.
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: மம்மாலியா
பெருவரிசை: Euarchontoglires
(தரப்படுத்தப்படாதது): Glires
வரிசை: ரோடென்டியா
போவிச், 1821
உள்வரிசைகள்

Anomaluromorpha
அனாமலியூரோமார்ப்பா
Castorimorpha
காசுட்டரிமார்ப்பா
Hystricomorpha (inc. Caviomorpha)
இசுட்ரிக்கோமார்ப்பா,கேவியோமார்ப்பா உள்ளடங்க
Myomorpha
மையோமார்ப்பா
Sciuromorpha
சியூரோமார்ப்பா

Rodent range.png
கொறிப்பி இனங்களின் கூட்டு நெடுக்கம்

கொறிணி (Rodent)[1] அல்லது கொறிப்பி உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். மேலும், கொறிப்பி (Rodent) (from Latin rodere, "கொறி") என்பது கொறிப்பன வரிசையில் அமைந்த பாலூட்டி உயிரியாகும்; இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. பாலூட்டிகளில் 40% கொறிப்பிகளே; இவை பரவலாக பேரெண்ணிக்கையில் அண்டார்ட்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் பரவியுள்ளன. இவை, மாந்தர் வாழிடம் உட்பட, அனைத்து தரைவாழிடங்களிலும் வாழும் பன்முகப்பட்டு பெருகிய பாலூட்டி வரிசையாகும். நீரெலி என்னும் பீவர் பெரிய மரத்தையும் முன்னம்பற்களால் கொறித்தே கீழே விழச்செய்து நீரில் பாலம் அமைக்கும் திறம் படைத்தது. உலகில் ஏறத்தாழ 2000 வகை கொறிப்பிகள் இருப்பதாகக் கூறுவர். தென் அமெரிக்காவில் உள்ள காப்பிபரா என்னும் பேரெலி வகை சற்றேறத்தாழ 1.2 மீ (4 அடி) நீளம் கொண்டுள்ளது.

கொறிப்பி இனங்கள் மரத்திலோ புதரிலோ நீர்ச்சதுப்பிலோ வாழவல்லன. நன்கறிந்த கொறிப்பிகளில் வீட்டெலி, வயலெலி, அணில்கள், பிரெய்ரி நாய்கள் முள்ளம்பன்றிகள், நீரெலிகள், கினியா பன்றிகள். மூங்கில் அணத்தான்கள், காபிபராக்கள், ஆம்சுட்டர்கள் (hamsters), கெருபிகள் (gerbils) ஆகியன அடங்கும். முன்பு, இவற்றில் முன்வெட்டுப் பற்கள் வளரும் முயல்களும் மான்களும் பிக்காக்களும் சேர்க்கப்பட்டிருந்தன; ஆனால் இவை இப்போது இலாகொமார்ப்பா எனும் தனி வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், இவை ஒரு பொதுமூதாதையில் இருந்து தோன்றிய உடன்பிறப்புக் குழுக்களே. இவை கிளிரேசு கவையில் அடங்குகின்றன.

பெரும்பாலான கொறிப்பிகள் நீண்ட வாலும் குறுங்கால்களும் பேருடலும் வாய்ந்த சிறிய விலங்குகளே.இவை உணவைக் கொறிக்கவும் புற்றுகளைத் தோண்டவும் தற்காப்புக்கும் முன்வெட்டுப் பற்களைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை கொட்டைகளையும் மரப்பொருட்களையும் தின்னுகின்றன என்றாலும் சில பலவகை உணவுகளை ஏற்கின்றன. இவை சமூக விலங்குகளாகும். பல கொறிப்பி இனங்கள் தம் சமூகக் குழுக்களில் சிக்கலான பலவழிமுறைகளில் தொடர்பு கொள்கின்றன. கொறிப்பன தனி இணை முயக்கமுறை, பலவிணை முயக்கமுறை, குழுஇணை முயக்கமுறை ஆகிய பல முறைகளில் புணர்கின்றன. இவற்றின் பிறப்பில் வளராத குட்டிகளும் முதிர்நிலை முற்றுயிரிகளும் இணையாக உடனமைகின்றன.


தொல்லுயிரிக் காலத்தில் இருந்தே மீப்பெருங்கண்டமாகிய இலாரேசியாவிலேயே புதைபடிவங்களாக கிடைத்துள்ளன. புத்துயிரிக் காலத்தில் இவை பன்முகப்பட்டு அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியது மட்டுமன்றி, கடல்களையும் தாண்டி ஓசியானாவிலும் புகுந்துள்ளன. இவை ஆப்பிரிக்காவில் மடகாசுகரில் இருந்து, தென் அமெரிக்காவுக்கும் சென்று பரவியுள்ளன. ஆத்திரேலியாவில் தரைவாழிகளாகப் பரவிய ஒரே தொப்புள்கொடி பாலூட்டி இனமாக கொறிப்பிகள் மட்டுமே அமைகின்றன.

கொறிப்பிகள் உணவுக்கும் உடைக்கும் செல்ல வளர்ப்புக்கும் ஆராய்சிக்கு ஆயவக விலங்குகளாகவு பயன்படுகின்றன. பழுப்பெலி, கருப்பெலி, வீட்டெலி போன்ற சில இனங்கள் மாந்தர் திரட்டிவைத்த உணவை உண்டு அழிக்கின்றன; நோய்களைப் பரப்புகின்றன. தற்செயலாக புது வாழிடங்களில் அறிமுகப்படுத்தப்படும் கொறிப்பி இனங்ங்கள் முற்றுகை இனங்களாக்க் கருதப்படுகின்றன. இவை நிலத்துக் கொன்றுண்னிகளிடம் இருந்து தனித்து வாழ்ந்த தீவுப் பறவைகள் போன்ற பல உயிரினங்களை அழித்துள்ளன.

பான்மைகள்[தொகு]

கொறிப்பியின் பல்லமைப்புப் படம்: வெட்டுப் பற்களின் முகப்புப் பரப்பு வன்காறையால் ஆனது; பின்பரப்பு மென்காரையால் ஆனது. கொறித்தல் செயல்பாடு பற்களின் பின்காறையைத் தேயச்செய்து கூரிய உளிபோன்ற முனையை உருவாக்குகிறது.
கருப்பெலியின் மேல் வெட்டுப்பல்லின் நாக்குப்புறக் காட்சி. மேல் வெட்டுப்பல் மஞ்சள் நிறத்திலும் கடைவாய்ப்பற்கள் நீல நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன

கொறிப்பிகளின் தெளிவான கூறுபாடு தொடரந்ண்டு வளரும் உளிக்கூர்மை வாய்ந்த இணைவெட்டுப் பற்களாகும்..[2] இந்த வெட்டுப்பற்களின் முகப்புப் பரப்பு தடித்த அடுக்குக் காறையாலும் பின்பரப்பு மெல்லடுக்குக் காறையாலும் ஆனவையாக உள்ளன.[3]

மிக நெருக்கமான இனங்களிலும் கொறிப்பிகளின் பான்மை வேறுபாடுகள் பன்முகமானவையாக அமைகின்றன. பல கொறிப்பிகளின் பான்மைகள் கீழே பட்டியலில் தரப்படுகின்றன.[4]

இனம் பரும வாணாள்

ஆண்டுகளில் († in captivity)

முதிருயிரி எடை

கிராம்களில்

காப்புவாழ்வு

நாட்கள்

ஆண்டுக்கான

இலிட்டர்கள்

இலிட்டரளவு

சராசரியில் (நெடுக்கம்)

வீட்டெலி (Mus musculus இனம்)[5] 4.0 20 19 5.4 5.5 (3 to 12)
வளையெலி (Heterocephalus glaber இனம்)[6] 31.0 35 70 3.5 11.3
கருப்பெலி (Rattus rattus இனம்)[7] 4.0 200 21 4.3 7.3 (6 to 12)
பழுப்பெலி (Rattus norvegicus)[8] 3.8 300 21 3.7 9.9 (2 to 14)
ஐரோப்பாசியச் சிவப்பெலி (Sciurus vulgaris இனம்)[9] 14.8 600 38 2.0 5.0 (1 to 10)
நெடுவால் சிஞ்சில்லா (Chinchilla lanigera இனம்)[10] 17.2 642 111 2.0 2.0 (1 to 6)
கினியா பன்றி (Cavia porcellus இனம்)[11] 12.0 728 68 5.0 3.8 (1 to 8)
கோய்ப்பு (Myocastor coypus இனம்)[12] 8.5 7,850 131 2.4 5.8 (3 to 12)
காபிபரா (Hydrochoerus hydrochaeris இனம்)[13] 15.1 55,000 150 1.3 4.0 (2 to 8)

பரவலும் வாழிடங்களும்[தொகு]

பூக்குடுவையில் பழுப்பெலி: சில கொறிப்பிகள் மாந்தர் வாழிடங்களிலும் வாழ்கின்றன.

பாலூட்டிகளில் பெருங்குழுவாகவும் மிகப் பரவலாகவும் அமையும் கொறிப்பிகள், அண்டார்ட்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. மாந்தரின் குறுக்கீடின்றி, இவை ஆத்திரேலியாவிலும் நியூகினியாவிலும் தரையில் வாழும் ஒரேயொரு தொப்புள்கொடி பாலூட்டிகளாகும்.மாந்தரும் இவ்வகை விலங்குகள் நெடுந்தொலைவு ஓசியானிக தீவுகளில் பரவக் காரணமாக இருந்துள்ளனர் (எ.கா., பாலினேசிய எலிகள்.)[14] கொறிப்பிகள் பனிவெளிகளில் இருந்து உயர்வெப்ப பாலைவெளிகள் வரை அனைத்து தரை வாழிடங்களிலும் தகவமைந்து வாழ்கின்றன.

நடத்தையும் வாழ்க்கை வரலாறும்[தொகு]

ஊட்டமுறை[தொகு]

கன்னக்குழிகளில் உணவைக் கொண்டுசெல்லும் சிப்புமங்குகள்

சமூக நடத்தை[தொகு]

பிரெய்ரி நகர நாய்
வலையெலிகளின் கூடு

தொடர்பு கொள்ளல் வழிமுறைகள்[தொகு]

மோப்பமுறை/வாசனைமுறை[தொகு]

வீட்டெலிகள் சிறுநீர், மலம், நாளச் சுரப்புகளின் வாசனையால் தம் சுற்றங்களை உணர்கின்றன.

கேள்வி/கேட்புமுறை[தொகு]

பார்வை முறை[தொகு]

தொடுபுலன்/ஊற்றுணர்வுமுறை[தொகு]

செந்தர வகைபாடு[தொகு]

Boreoeutheria

Laurasiatheria


PerissodactylaEquus quagga (white background).jpg



CarnivoraDogs, jackals, wolves, and foxes (Plate XI).jpg



Euarchontoglires


PrimatesYellow baboon white background.jpg


Glires

Lagomorpha


Ochotona (Old World rabbits)Bruno Liljefors - Hare studies 1885 white background.jpg



Sylvilagus (New World rabbits)The quadrupeds of North America (Plate CVIII) (white background).jpg



Rodentia

Hystricomorpha


Ctenodactylus (gundis)Pectinator spekei Wagner white background.jpg




Atherurus (brush-tailed porcupines)Actes de la Socilinnnne de Bordeaux (1883) (white background).jpg




Octodontomys (mountain degus)Octodontomys gliroides 1847 -white background.jpg




Erethizon (North American porcupines)ErethizonRufescensWolf white background.jpg



Cavia (guinea pigs)Carnegie Institution of Washington publication (1914) (white background).jpg







Sciuromorpha


Aplodontia (mountain beavers)




Glaucomys (New World flying squirrels)The quadrupeds of North America (Plate XV) (white background).jpg



Tamias (chipmunks)Chipmunk (white background).png





Castorimorpha


Castor (beavers)Die Gartenlaube (1858) b 068 white background.jpg




Dipodomys (kangaroo rats)Image taken from page 111 of 'Report of an expedition down the Zuni and Colorado Rivers by Captain L. Sitgreaves (white background).jpg



Thomomys (pocket gophers)Western pocket gopher.jpg




Myodonta

Muroidea


Peromyscus (deer mice)Image taken from page 105 of 'Report of an expedition down the Zuni and Colorado Rivers by Captain L. Sitgreaves (white background).jpg




Mus ([true] mice)MusMuralisSmit white background.jpg



Rattus (rats)Ruskea rotta.png




Dipodoidea


Sicista (birch mice)Pallas Sicista betulina 1778-79 white background.png




Zapus (jumping mice)Squirrels and other fur-bearers (Plate 15) (white background).jpg



Cardiocranius (pygmy jerboas)Cardiocranius.jpg











பேபரின் ஆய்வுவழி கொறிப்பிகளின் குடும்பங்கள் (2012).[15]

அழிதிறமும் நோய்ப்பரப்பலும்[தொகு]

கொறிப்பிகல் வயல் பயிர்களுக்குப் பெருத்த இழப்பைத் தருகின்றன. சுண்டெலி போன்ற வயலெலிகள் உருளைக்கிழங்கைத் தின்றழித்தல்.

சில கொறிப்பிகள் வேளான்பொருள்களை அழிக்கின்றன; மேலும் பேரளவில் திரட்டிவைத்த விளைபொருள்களையும் தின்றே தீர்க்கின்றன.[16] எடுத்துகாட்டாக, 2003 இல் ஆசியாவில் உள்ள எலிகளும் சுண்டெலிகளும் 200 மில்லியன் மக்களுக்கான உணவைத் தீர்த்துள்ளன. பெரும்பாலான உணவு அழிப்புகள் ஒப்பீட்டலவில் மிக் குறைந்த எண்ணிக்கை உயிரினங்களாலேயே, குறிப்பாக எலிகளாலும் சுண்டெலிகளாலுமே ஏற்படுகிறது.[17]இந்தோனேசியாவிலும் தான்சானியாவிலும், கொறிப்பிகள் 15% பயிர்விளைச்சலைக் குறைக்கின்றன; தென் அமெரிக்காவில் இவை 90% பயிர்விளைச்சலைத் தின்றே தீர்க்கின்றன. ஆப்பிரிக்காவில்மாசுட்டோமீசு, ஆர்விகாந்தீசு உள்ளடங்கிய கொறிப்பிகள் கூலங்கள், வேர்க்கடலை, காய்கறிகள், தேங்காய்கள் ஆகியவற்றை அழிக்கின்றன. ஆசியாவில், எலிகளும் சுண்டெலிகளும் ஒத்த பிறவும் சேர்ந்து, நெற்பயிர், சோளம், கிழங்குகள், காய்கறிகள், கொட்டைகள் ஆகியவற்றை அழிக்கின்றன. இப்பணியில் மைக்கிரோதசு பிராந்தித், இயோசுபலாக்சு பைலேயி, மெரியோனசு உங்குவிலேட்டசு, ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. ஐரோப்பாவில், மைக்கிரோட்டசு, அப்போடெமசு உயிரினங்களும் எலிகளும் சுண்டெலிகளும், சிலவேளைகளில் ஆர்விக்கோலா டெரசுட்டிரிசு ஆகியவை பூஞ்செடிகள், காய்கறிகள், புல்வெளிகள், கூலங்கள் ஆகிவற்றை அழிக்கின்றன. தென் அமெரிக்காவில், பல் கொறிப்பி இனங்கள், குறிப்பாக 'ஓலோச்சிலசு (Holochilus), அக்கோடான், கலோமிசு, ஒலிகோரிசோமிசு, பைலாட்டிசு, சிகுமோடான் , சிஅகோடோண்டோமிசு போன்ற உயிரினங்கள் கரும்பு, பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் ஆகியவற்றை அழிக்கின்றன.[17]


கொறிப்பிகள் நோய்பரப்பலில் கணிசமான பங்கு வகிக்கின்றன.[18] கருப்பெலிகள் தம்முடன் கொண்டுசெல்லும் வட எலியுண்ணிகள் வழியாக யெர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis) எனும் குச்சுயிரியைப் பரப்பி ஒருவகைப் பிளேக் நோயை பரப்புவதோடு,[19] டைப்பசு, வைல் நோய், டக்சோபிளாசுமாசிசு, டிரைக்கினாசிசு போன்ற நோய்களை உருவாக்கவல்ல உயிரிகளையும் தம்முடன் கொண்டுசெல்கின்றன.[20]பல கொறிப்பிகள் பூமாலை உள்ளடங்கிய அண்டாநச்சுயிரிகள், தோபிரவா நச்சுயிரிகள், சாரேமா நச்சுயிரிகள், ஆகிய தொற்றுதரும் நச்சுயிரிகளைக் கொண்டுசெல்கின்றன.[21] கொறிப்பிகள், பாபேசியாசிசு, தோல்சார் இலெழ்சுமசியாசிசு, மாந்தக் குறுணை அனாபிளாசுமாசிசு, இலைம் நோய், ஓம்சுக் மூளைக்காய்ச்சல், போவாசான் நச்சுயிரி, என்புருக்கியம்மை, தளர்த்து காய்ச்சல், கன்மலைப் பொட்டுக் காய்ச்சல், மேற்கு நைல் நச்சுயிரி ஆகிய நோய்களையும் உருவாக்குகின்றன.[22]

கொறிப்பி பொறி நிலையம், சென்னை, இந்தியா

குறிப்புகள்[தொகு]

  1. "Search Results for rodent" (TAB encoding). தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2007-12-03.
  2. Single, G.; Dickman, C. R.; MacDonald, D. W. (2001). "Rodents". in MacDonald, D. W.. The Encyclopedia of Mammals (2nd ). Oxford University Press. பக். 578–587. ISBN 978-0-7607-1969-5. 
  3. Waggoner, Ben (15 August 2000). "Introduction to the Rodentia". University of California Museum of Paleontology. பார்த்த நாள் 4 July 2014.
  4. "AnAge: The animal ageing and longevity database". Human Ageing and Genomics Resources. பார்த்த நாள் September 23, 2014.
  5. Berry, R. J. (1970). "The natural history of the house mouse". Field Studies (Field Studies Council) 3: 222. http://fsj.field-studies-council.org/media/344045/vol3.2_68.pdf. 
  6. "Heterocephalus glaber: Naked mole rat". Encyclopedia of Life. பார்த்த நாள் 2 October 2014.
  7. Schwartz, Charles Walsh; Schwartz, Elizabeth Reeder (2001). The Wild Mammals of Missouri. University of Missouri Press. பக். 250. ISBN 978-0-8262-1359-4. https://books.google.com/books?id=uEWl0ZM6DfUC&pg=PA250. 
  8. "Rattus norvegicus: Brown rat". Encyclopedia of Life. பார்த்த நாள் 2 October 2014.
  9. "Sciurus vulgaris: Eurasian red squirrel". Encyclopedia of Life. பார்த்த நாள் 2 October 2014.
  10. Spotorno, Angel E.; Zuleta, C. A.; Valladares, J. P.; Deane, A. L.; Jiménez, J. E. (2004). "Chinchilla laniger". Mammalian Species 758: 1–9. doi:10.1644/758. 
  11. Vanderlip, Sharon (2003). The Guinea Pig Handbook. Barron's. பக். 13. ISBN 0-7641-2288-6. 
  12. "Myocastor coypus: Coypu". Encyclopedia of Life. பார்த்த நாள் 2 October 2014.
  13. "Hydrochaeris hydrochaeris:Capybara". Encyclopedia of Life. பார்த்த நாள் 2 October 2014.
  14. Nowak, R. M. (1999). Walker's Mammals of the World. Johns Hopkins University Press. பக். 1244. ISBN 0-8018-5789-9. 
  15. Fabre (2012). "A glimpse on the pattern of rodent diversification: a phylogenetic approach". BMC Evolutionary Biology 12: 88. doi:10.1186/1471-2148-12-88. பப்மெட் 22697210. PMC 3532383. http://bmcevolbiol.biomedcentral.com/articles/10.1186/1471-2148-12-88. பார்த்த நாள்: 30 December 2015. 
  16. Meerburg, B. G.; Singleton, G. R; Leirs, H. (2009). "The Year of the Rat ends: time to fight hunger!". Pest Management Science 65 (4): 351–2. doi:10.1002/ps.1718. பப்மெட் 19206089. http://www3.interscience.wiley.com/journal/121686000/abstract. 
  17. 17.0 17.1 Stenseth, Nils Chr; Leirs, Herwig; Skonhoft, Anders; Davis, Stephen A.; Pech, Roger P.; Andreassen, Harry P.; Singleton, Grant R.; Lima, Mauricio et al. (2003). "Mice, rats, and people: The bio-economics of agricultural rodent pests". Frontiers in Ecology and the Environment 1 (77): 367–375. doi:10.2307/3868189. 
  18. Meerburg, B. G.; Singleton, G. R.; Kijlstra, A. (2009). "Rodent-borne diseases and their risks for public health". Critical Reviews in Microbiology 35 (3): 221–70. doi:10.1080/10408410902989837. பப்மெட் 19548807. 
  19. McCormick, M. (2003). "Rats, communications, and plague: Toward an ecological history". Journal of Interdisciplinary History 34 (1): 1–25. doi:10.1162/002219503322645439. http://mitpress.mit.edu/journals/pdf/jinh_34_1_1_0.pdf. 
  20. Meerburg, B. G.; Singleton, G. R.; Kijlstra, A. (2009). "Rodent-borne diseases and their risks for public health". Critical Reviews in Microbiology 35 (3): 221–70. doi:10.1080/10408410902989837. பப்மெட் 19548807. http://www.informahealthcare.com/doi/pdf/10.1080/10408410902989837. 
  21. "Rodent-borne diseases". European Centre for Disease Prevention and Control. பார்த்த நாள் 1 September 2014.
  22. "Diseases indirectly transmitted by rodents". Centers for Disease Control and Prevention (2012). பார்த்த நாள் 1 September 2014.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • McKenna, Malcolm C.; Bell, Susan K. (1997). Classification of Mammals Above the Species Level. Columbia University Press. ISBN 0-231-11013-8. 
  • Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference. Johns Hopkins University Press. 2005. ISBN 978-0-8018-8221-0. 
    • Carleton, M. D.; Musser, G. G. "Order Rodentia", pages 745–752 in Wilson & Reeder (2005).

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

விலங்கியல், எலும்பியல், ஒப்பீட்டு உடற்கூற்றியல்[தொகு]

பலவகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொறிணி&oldid=2453135" இருந்து மீள்விக்கப்பட்டது