மஹாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பாஜக கூட்டணி..! -முதல்வராகிறார் ஆதித்யா தாக்கரே? – பாஜக வின் பலே திட்டம்..!

70

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் மீண்டும் பாஜக-சிவசேனாக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதியான நிலையில் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே மாநிலத்தின் இளம் துணை முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு வலுவாகியுள்ளது.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் வொர்லி தொகுதியில் சுமார் 58,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் ஆதித்ய தாக்கரே.

29 வயதாகும் ஆதித்ய தாக்கரே முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் வொர்லியில் களம் கண்டுள்ளார்.

சிவசேனா இளம் ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில் மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூட ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவியளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆதித்ய தாக்கரே இது பற்றி எப்போதும் வெளிப்படையாக எதுவும் கூறாமல் மவுனமே சாதித்து வந்தார்.

இப்போது வரை மகாராஷ்டிராவின் முந்தைய துணை முதல்வர்கள் அனைவரும் 50 வயதில்தான் இந்தப் பதவிக்கு வந்துள்ளனர். 2015-ம் ஆண்டில் லாலு பிரசாத் வாரிசு தேஜஸ்வி யாதவ் பிஹார் துணை முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு வயது 26.

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கூட தற்போது ஆதித்யதாக்கரே ஃபார் சிஎம் என்ற டிவ்ட்டர் ஹேஷ்டேக் பெரிய அளவில் அங்கு வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of