லங்காப் வட்டாரத்தில் அதிகரிக்கும் செம்பனை திருட்டுச் சம்பவம்


கீழ்ப்பேரா மாவட்டம், லங்காப் மற்றும் பத்தாக் ராபிட் பகுதிகளில் உள்ள செம்பனை சிறுதோட்டக்காரர்கள் அனுபவிக் கும் செம்பனைக் குலைகள் திருட்டுப் பிரச்சினைக்கு மாவட்டக் காவல்துறை உடனடி யாக நடவடிக்கை எடுக்கக் கோரி மொத்தம் 43 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு காவல் துறை தலைவரிடம். நேற்றைய தினம் ஒப்படைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அந்த புகார் மனுவில், சில மர்ம நபர்கள் 2 ஏக்கருக்கு 150.00 வெள்ளி கொடுத்தால், நிலத்தில் திருட்டுச் சம்பவம் ஏற்படாமல் காவல் காப்பதாக கூறுகின்றனர். மறுத்தால், செம்பனை குலைகள் திருடப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கி, செம்பனை நடவு செய்து, 3 ஆண்டுகள் செம்பனைக் கன்றுகளை பாதுகாத்து வரு கின்றோம். செம்பனை மரங்கள் பலன் கொடுக்கும்போது செம்பனைக் குலைகள் திருடப் படுகின்றன. திருட்டுச் சம்பவத்தில் தண்டனைப் பெறும் மர்ம நபர்கள், தண்டனை காலம் முடிந்த பின்னரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபாடு காட்டு கின்றனர் என்றும் அந்த 43 நில உரிமையாளர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர் என்றும் டெரன்ஸ் நாயுடு விவரித்தார்.
அந்த நிலையில் செம்பனை விலையேற்றம் அடையும்போது திருட்டுச் சம்பவங்களினால், சிறு தோட்டக்காரர்கள் அனுபவிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் போலீசார் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் அவர்கள் பாராட்டினைக் கூறியுள்ளதாக டெரன்ஸ் நாயுடு எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =