dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? - ராசுக்குட்டி

Share
மறக்க முடியுமா? - ராசுக்குட்டி Entertainment பொழுதுபோக்கு

படம் : ராசுக்குட்டி
வெளியான ஆண்டு : 1992
இயக்கம் : கே.பாக்யராஜ்
நடிகர்கள் : பாக்யராஜ், ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார்
தயாரிப்பு : பஞ்சு அருணாசலம்

கடந்த, 1992ம் ஆண்டு தீபாவளிக்கு தேவர் மகன், பாண்டியன், ராசுக்குட்டி, திருமதி பழனிச்சாமி, செந்தமிழ்ப்பாட்டு, காவியத்தலைவன் உட்பட, பல படங்கள் வெளியாகின. அதில் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, ராசுக்குட்டி!

சின்ன வீடு படத்தில் பிரிந்த, இயக்குனர் கே.பாக்யராஜ் - இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணி, ஏழு ஆண்டுகளுக்கு பின், ராசுக்குட்டி படத்தில், பஞ்சு அருணாசலத்தால் இணைந்தது. சாதாரண கதை தான். பாக்யராஜின் திரைக்கதையால், சுவாரஸ்யமானது.

பணக்கார பண்ணையாரின் மகனான பாக்யராஜ், செல்லமாக வளர்க்கப்பட்டதால், படிக்காமல், வேலை செய்யாமல், ஊர் சுற்றித் திரிகிறார். அவரை படித்தவர் என நினைத்து, ஐஸ்வர்யா திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில் அவர், படிக்காதவர் என்பதும், தத்து பிள்ளை என்பதும் தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் நிகழ்வுகளை, சென்டிமென்ட், காமெடியுடன் சொன்னப்படம் தான், ராசுக்குட்டி.

ராசுக்குட்டியின் உதவியாளர், செம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர், உதவி இயக்குனர் ஜெகன். இப்படத்திற்கு பின், செம்புலி ஜெகன் என்ற அடைமொழிப் பெயரைப் பெற்றார். இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யாவுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் முத்து, பவளம் பதித்த பட்டுப் புடவையை, டிசைன் செய்து கொடுத்தார், பூர்ணிமா பாக்யராஜ். இது, அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இளையராஜா இசையில், நான் புடிச்ச கிளியே, ஹோலி ஹோலி... பாடல்கள் மட்டுமே, வெற்றி பெற்றன. இப்படம், ஹிந்தியில், ராஜா பாபு; தெலுங்கில், அபாயிகரி பெல்லி; கன்னடத்தில், ஜக்கேஷுடன் படேலா என, ரீமேக் செய்யப்பட்டது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement