குறுக்குத் தீவு ரயில்பாதையின் 2ஆம் கட்டம் 2032ல் திறப்பு

குறுக்­குத் தீவு ரயில்­பா­தை­யின் இரண்­டாம் கட்­டம் 2032ஆம் ஆண்டு திறக்­கப்­ப­டும்­போது டர்ஃப் சிட்­டி­யில் இருந்து ஜூரோங் லேக் வட்­டா­ரம் வரை ஆறு ரயில் நிலை­யங்­கள் அமை­ய­வி­ருக்­கின்­றன.

இவற்­றில் டௌன்­ட­வுன் பாதை­யில் உள்ள கிங் ஆல்­பர்ட் பார்க் நிலை­யத்­தி­லும் கிழக்கு மேற்கு ரயில்­த­டத்­தில் உள்ள கிள­மெண்டி நிலை­யத்­தி­லும் முனை­யங்­கள் அமை­யும்.

மொத்­தம் 15 கிலோ­மீட்­டர் நீள­முள்ள இந்த ரயில் பாதை­யின் எஞ்­சிய இரண்டு நிலை­யங்­கள், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அருகே அமை­யும் மாஜு, வெஸ்ட் கோஸ்ட் ஆகி­யவை.

இரண்­டாம் கட்­டத்­துக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் அடுத்த ஆண்டு தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இந்த ரயில்­பா­தை­யின் முதல் கட்­டத்­தில் சாங்கி ஏவி­யே­ஷன் பார்க் முதல் சின் மிங்­கின் பிரைட் ஹில் வரை 12 ரயில் நிலை­யங்­கள் அமைந்­தி­ருக்­கும். இது 2030ஆம் ஆண்டு திறக்­கப்­படும்.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் இரண்­டாம் கட்­டப் பணி­கள் குறித்து நேற்று அறி­வித்­தார்.

ஜூரோங் லேக் வட்­டா­ரம், வெஸ்ட் கோஸ்ட் போன்­ற­வற்­றுக்­கும் கிழக்கு, மேற்கு, வட­கி­ழக்­குப் பகு­தி­க­ளுக்­கும் இடையே தொடர்பை மேம்­ப­டுத்த இது உத­வும் என்­றார் அவர்.

குறுக்­குத் தீவு ரயில் பாதை­யின் இரண்­டாம் கட்ட நிலை­யங்­கள் சேவை வழங்­கத் தொடங்­கிய பிறகு 40,000 குடும்­பங்­கள் அத­னால் பல­ன­டை­யும். பயண நேரம் இந்­தச் சேவை­யின் மூலம் குறை­யும் என்­ப­தை­யும் அமைச்­சர் சுட்­டி­னார்.

எடுத்­துக்­காட்­டாக ஹவ்­காங்­கி­லி­ருந்து நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக்கு 35 நிமி­டங்­களில் செல்­ல­லாம்; தற்­போது இதற்கு பேருந்­தி­லும் ரயி­லி­லும் செல்ல ஒரு மணி நேரத்­துக்கு மேல் ஆகும்.

மேலும் செய்தி 2ஆம் பக்கம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!