தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் நூல் வெளியீட்டு விழா..

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சியினை திருச்சியில் 14 ,15 ,16 ஜூன் 2019 தேதிகளில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசாஹாலில் நடைபெற உள்ளது.

கண்காட்சி துவக்க விழாவில் தஞ்சை நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன் எழுதிய தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூலில்  நூலில் செஞ்சி தஞ்சை மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களின் 820 காசுகள் புகைப்படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

வெளியீட்டு விழாவில் சோழ மண்டல நாணயவியல் கழக நிறுவனர் துரைராசு, சென்னை காயின் சொசைட்டி செயலர் கார்த்திக், திருச்சிராப்பள்ளி நாணவியல் கழகத் தலைவர் ஆறுமுகம், செயலர் பத்ரிநாராயணன், பொருளாளர் சேவியர் சார்லஸ், இந்தோ பிரெஞ்ச் நாணயவியல் தபால் தலை சேகரிப்போர் சங்க செயலர் ஜெயச்சந்திரன் உட்பட வரலாற்று அறிஞர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அஜீஸ், பாண்டியன் முஹமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

செய்தி தொகுப்பு
அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்
கீழை நியூஸ்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image